கோர்ட் வரை வந்த தினேஷின் வாழ்க்கை – ரஷிதா இப்படி செய்வதற்க்கு இதான் காரணம். கண்ணீர் வடித்த தினேஷின் பெற்றோர்கள்.

0
546
- Advertisement -

சில மாதங்களாகவே ரக்ஷிதா- தினேஷ் உடைய விவகாரம் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் ரக்ஷிதா- தினேஷ். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரியவில்லை. மேலும், ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை . இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. பின் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. அதற்கு பின் இருவரும் தங்கள் வேலையை பார்க்க தொடங்கினார்கள். தற்போது தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதில் அவருடைய மனைவிக்காக தான் கலந்து கொண்டிருப்பதாகவும், டைட்டிலை அவருக்காக பரிசளிப்பேன் என்றெல்லாம் கூறியிருந்தார். இதைப் பார்த்த தினேஷ்- ரக்ஷிதா ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து ரக்ஷிதா வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இதற்கு ரக்ஷிதா, வாய்ப்பில்லை என்பது போல பதிவு போட்டிருந்தார். மேலும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் தினேஷின் அப்பா அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார்கள். பின் தினேஷ் அப்பா, காதலித்தால் கூட என்னுடைய அப்பா, அம்மா சம்மதத்துடன் தான் கல்யாணம் செய்வேன் என்று என் மகன் சொன்னான்.

அதனால் அந்த பொண்ணு வந்து பேசியது. நாங்களும் பையனுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று நினைத்து கல்யாணத்திற்கு சம்மதித்தோம். எட்டு வருடம் வாழ்ந்தார்கள். இப்போ சிலருடைய தவறான வழிகாட்டுதலால் என்னுடைய மகன் வாழ்க்கை நடுத்தெருவில் இருக்கிறது. சரி செய்ய எவ்வளவு முயற்சி செய்து விட்டோம். ஆனால், இறங்கி வருவது என்பது ரெண்டு தரப்பிலும் இருக்கணும். ஒரு தரப்பு மட்டும் சமாதானத்துக்கு தயாராக இருந்தால் அதில் தீர்வு எப்படி கிடைக்கும்? அந்த பொண்ணு பிடிவாதமாக இருக்கிறார்.

-விளம்பரம்-

நாங்கள் வேற என்ன செய்ய முடியும். எல்லாம் முடிந்து போச்சுன்னு விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான். காரணம், இப்போது விவாகரத்து எல்லோருடைய வாழ்க்கையிலும் சாதாரணமாகிவிட்டது. அதனால் தான் எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு வேலையை பாரு என்று சொல்லிட்டு நடிக்க வாய்ப்பு கிடைக்க வரைக்கும் சென்னையில் இருக்கட்டும். வாய்ப்பு இல்லையா ஊருக்கு வந்துட்டுன்னு சொல்லிட்டேன். வீடு, தோட்டம் என்று என்னால் முடிந்த சக்திக்கு கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறேன்.

அதை பார்த்துட்டு இருக்க வேண்டியது தான். யார் யாருக்கு என்ன அமைப்பு இருக்குதோ அப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். இந்த மாத இறுதியில் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் வர இருக்கிறது. சேர்ந்து வாழத்தான் என் பையன் ஆசைப்பட்டான். ஆனால், பிரிந்து தான் போகணும் என்று பிடிவாதமாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் உங்க விருப்பம் நீதிமன்றத்துக்கு நீங்கள் போயிடுங்க நான் விவாகரத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டான். இந்த மாத கடைசியில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழட்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement