கோயம்பேட்டில் திருநங்கைகளுடன் வாக்குவாதம் செய்து ரோட்டில் அமர்ந்து தர்ணா செய்த VJ லயா.

0
460
- Advertisement -

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் திருநங்கைகளுடன் நடிகை லயா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லயா. இவர் சமூக ஆர்வலர், தன்னம்பிக்கை பேச்சாளர், நடிகை என பன்முகம் கொண்டவர். விஜேவாகவும் பணியாற்றி இருக்கிறார். பின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் ரங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

லயா குறித்த தகவல்:

சமீபத்தில் வெளிவந்த பகாசூரன் படத்தில் லயா நடித்து இருக்கிறார். இதை அடுத்து தொடர்ந்து படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இவர் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் திருநங்கைகளுடன் லயா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் லயாவிடம் திருநங்கைகள் இரண்டு பேர் பிச்சை கேட்டார்கள்.

லயா வீடியோ:

காசு இல்லை என்று சில்லறை கொடுத்ததற்கு அடாவடித்தனமாக நோட்டாக தான் கொடுக்க வேண்டும் என்று அடாவடித்தனமாக சண்டை போட்டார்கள். நான் பிச்சை எடுப்பது தவறு, வேலை வாங்கித் தருகிறேன் என்று சொன்னதற்கு வாடி போடி என்று அவமரியாதையாக பேசுகிறார்கள். இந்த மாதிரியான திருநங்கைகளால் தான் மற்ற திருநங்கைகளுக்கும் மரியாதை இல்லை. நாட்டில் திருநங்கைகள் எவ்வளவோ சாதனை செய்கிறார்கள்.

-விளம்பரம்-

லயா சொன்னது:

அப்படி இருக்கும்போது இவர்கள் செய்வது ரொம்ப தவறு. பிச்சை கேட்பதே தப்பு .அதை அடாவடித்தனமாக சண்டையிடுவது ரொம்ப ரொம்ப தப்பு. நான் வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லியும் இவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்று லயா பேசிக் கொண்டிருக்கிறார். உடனே அந்த திருநங்கைகள், நாங்கள் அப்படியெல்லாம் பேசவில்லை. காசு தான் கேட்டோம் என்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

திருநங்கை குறித்து சொன்னது:

மீண்டும் மீண்டும் லயா நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. நான் பாலியல் தொழில் தான் செய்வேன் என்று சொல்கிறார்கள். பின் லயா, நிறைய பேர் சுயமா வேலை பார்த்துக் கொண்டிக்கிறார்கள். அவர்கள் கூட இந்த அளவு பேசி நான் பார்த்ததில்லை. அரசாங்கம் இவர்களின் நிலையை மாற்றி இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை
என்று பேசினார்.

Advertisement