2.0 படம் ஓட வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் செய்ததை பாருங்கள்..!இன்னுமா இதெல்லாம் பண்றாங்க..!

0
179
2.0

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 2.0. இந்தப் படம் இன்று (நவம்பர் 29)உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால், கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

rajinifans

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இந்நிலையில், இந்தப் படம் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் சிலர் திருப்பரங்குன்றம் வெயில்காத்த அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும், மண்சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சனம் செய்தும் வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்வில் ரஜினி ரசிகர்கள் சரவணன், பழனி ஆகியோர் மண்சோறு சாப்பிட்டு அங்கப்பிரதட்சனம் செய்தனர். பிரார்த்தனையின் போது பெண் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.ரஜினி ரசிகர்களின் இந்த செயல் பலரையும் ஆச்சரியபட வைத்துள்ளது.

அதே போல ஒரு நடிகரின் படத்திற்காக மண் சோறு சாப்பிடுவதா என்று சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து தான் வருகின்றனர். இருப்பினும் ரஜினிக்கு மக்கள் மத்தியில் இன்னும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம்.