முதன் முறையாக நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ள நடிகர் அக்சய் குமார், இந்த படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் படுமும்மரமாக நடைபெற்று வருகிறது.
பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயராகி வரும் இந்த படம் முதல் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயராகி வருகிறது என்று கூறப்பட்டது. இதனால் இந்திய அளவுவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் இது என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி "2.0" திரைப்படம் 545 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பை தாண்டி இந்தியாவில் தயாராகி வரும் முதல் படம் என்ற பெருமையை "2.0" படம் பெற்றுள்ளது.




