தில்லு முள்ளு படத்தை தொடர்ந்து ரஜினி-KB கூட்டணியில் உருவான டபுள் ஆக்ஷன் படம் – கைவிடப்பட்ட காரணம்?

0
501
- Advertisement -

ரஜினி-கே பாலச்சந்தர் கூட்டணியில் வெளிவராத படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இப்படி ரஜினிகாந்த் அவர்கள் கோலிவூட்டில் உச்ச நட்சத்திரமாக சொல்லிக் கொண்டிருப்பதற்கு காரணம் இயக்குனர் கே பாலசந்தர் தான்.

-விளம்பரம்-

இவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகம் செய்தது இயக்குனர் கே பாலச்சந்தர் தான். இவர் 1975 ஆம் ஆண்டு ரஜினியை வைத்து அபூர்வராகங்கள் என்ற படத்தை எடுத்து இருந்தார். இந்த படம் வெற்றி பெற்ற பிறகு ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் மூன்று முடிச்சு. இந்த படத்தை கே பாலச்சந்தர் தான் இயக்கியிருந்தார். அதனை அடுத்து இவர் ரஜினியை வைத்து அவர்கள், தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், தில்லு முல்லு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார்.

- Advertisement -

ரஜினி- கே பாலச்சந்தர் கூட்டணி:

கடைசியாக ரஜினி- கே பாலச்சந்தர் கூட்டணியில் வந்த படம் தான் தில்லுமுல்லு. அதற்குப் பிறகு அவர் ரஜினியை வைத்து படம் இயக்கவில்லை. இந்த நிலையில் கே பாலச்சந்தர்- ரஜினி கூட்டணியில் உருவாகி பாதிலேயே நின்ற படம் குறித்த தகவல்தான் வெளியாகி இருக்கிறது. அதாவது, மனிதனின் மறுபக்கம். இந்த படத்தை தான் கே. பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் இயக்குனர் வேடத்தில் நடித்திருந்தார்.

மனிதனின் மறுபக்கம் படம்:

இந்த படத்தில் புதுமுக நடிகை கீதா நடித்திருந்தார். இந்தப் படத்தின் ஒரு சில காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஆனால், ஏதோ சில காரணங்களால் இந்த படம் நின்றுவிட்டது. அதற்கு பிறகு இந்த படத்தின் பாடல் காட்சியை யுத்த காண்டம் என்ற படத்தில் தயாரிப்பாளர் கலாகேந்திரா நிறுவனம் ரஜினியின் கௌரவ வேடம் என்று வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இந்த தகவல் தான் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஜெயிலர் படம்:

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஷாக்கி ஷெரப், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இந்த படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி நடித்து இருக்கிறார். இதனை அடுத்து இவர் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். ஜெய் பீம் பட இயக்குனர் டி ஜே ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இதை அடுத்தும் சில படங்களில் ரஜினி கமிட்டாகி நடிக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.

Advertisement