தன் தாய் மண்ணில் இருந்து வெளியாகி பட்டையை கிளப்பி வரும் படம் குறித்து ரஜினி போட்ட பதிவு.

0
530
rajini
- Advertisement -

காந்தாரப் படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று கே ஜி எஃப். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் பிலிம்ஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தான் தற்போது காந்தாரா என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜனீஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி தான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

காந்தாரா படம்:

மேலும், தமிழில் இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்திலும் காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனரும், நடிகரும் ஆன ரிஷப் செட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசி இருந்தார்.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்த படம் பிறமொழி ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சனங்கள் என பலருமே பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் காந்தாரா படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் பதிவிட்ட பதிவு:

மேலும், இது குறித்து ரஜினிகாந்த் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், தெரிந்ததை விட தெரியாதது அதிகம் என்பதை இதைவிட யாரும் மிக சிறப்பாக சொல்லி இருக்க முடியாது. காந்தாரா படம் பார்க்கும்போது என் உடல் சிலிர்த்து விட்டது. எழுத்தாளர், இயக்குனர், நடிகராக பணியாற்றிய ரிஷப் செட்டிக்கு ஹாட் ஆப். இந்திய சினிமாவில் ஒரு தலை சிறந்த படத்தை கொடுத்ததற்காக ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். இப்படி ரஜினிகாந்த் பதிவிட்ட பதிவை பார்த்து ரிசப், ரஜினிகாந்த் சார் நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.

வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்:

நான் சிறுவயதிலிருந்தே உங்கள் ரசிகன். உங்கள் பாராட்டு என் கனவை நனவாக்கியது. இது போன்ற கதைகளை இன்னும் உருவாக்கத் தூண்டுகிறது நன்றி ரஜினிகாந்த் சார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் தனுஷும் காந்தாரா படத்தை பார்த்து பிரம்மிப்பாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று பாராட்டி இருந்தார். சிம்புவும் பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கேக் அனுப்பி இருந்தார். இவர்களைத் தொடர்ந்து கார்த்தி, ரிசப் செட்டியை நேரில் சந்தித்து பாராட்டி இருந்தார். இப்படி பல பிரபலங்கள் காந்தாரா படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement