ரஜினியை அசிங்கப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் !

0
1779
rajini-csk

தமிழகம் முழுவதும் காவேரி மேலாண்மை அமைக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.இதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் சினிமா சங்கமும் ஆதரவு தெரிவித்து நேற்றைய முன்தினம் மௌன போராட்டம் ஒன்றை நடத்தினர்.

csk

மேலும் கடந்த சனிக்கிழமை ஐ. பி. எல் தொடங்கியவுடன் மக்கள் அனைவரும் இந்த பிரச்னையை சற்று மறந்து விட கூடாது என்பதற்காக பல்வேறு தரப்பினரும் ஐ. பி. எல் லை புரக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.இதையும் தாண்டி ஐ. பி. எல் லிற்கு செல்ல விரும்புவோர் விவசயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை எடுத்துச் செல்லுமாறு வேண்டுகோளை விடுத்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவேரி மேளாண்மைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் இன் உறுதுணையை நாடினார்.தற்போது தமிழக அணியை அடையாளப்படுத்தி ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வீரர்கள் அனைவரும் ஆடுகலங்களில் விளையாடடும் போது கருப்பு பட்டை ஒன்றை தங்களது ஆடைகளில் அணிந்து விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

dhoni

இதனால் தமிழகத்தில் நடக்கும் விவசாயிகளின் பிரச்சனை நாடுமுழுவதும் தெரிய வாய்ப்பிருக்கு என்று கருதினார். ஆனால் இதற்கு சற்றும் செவி சாய்க்காத சி.எஸ் ல்.கே அணி கடந்த சனிக்கிழமை விளையாடிய போது எந்த வித கருப்பு பட்டையையும் அணிந்திருக்கவில்லை.மேலும் அந்த அணியின் நிர்வாகமும் ‘எந்த ஒரு வீரரும் கருப்பு பட்டயையும் அணிய மாட்டார்கள்’ என ரஜினியின் வேண்டுகோளை துட்சபடுத்தியுள்ளது.இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்திலும் சென்னை அணி காவிரி வேளாண்மை ஆதரவாக கருப்பு பட்டை நியமாட்டார்கள் என்பது உறுதியாகிறது.