‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ – பல ஆண்டுகள் கழித்து தான் வேலை செய்த இடத்திற்கு விசிட் அடித்த ரஜினி.

0
1025
- Advertisement -

பழைய நினைவுகளை மறக்காமல் தான் வேலை பார்த்த இடத்திற்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஷாக்கி, மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை ஜெயிலர் படம் 525 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதோடு செப்டம்பர் மாதம் இந்த படம் netflix மற்றும் சன் நெஸ்ட் என இரண்டு தளத்திலும் வெளியாக இருக்கிறது. மேலும், ஜெயிலர் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

தலைவர் 170:

இதனை அடுத்து ரஜினிகாந்தின் 170 வது படத்தை லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்க இருக்கிறார். இதற்கான பூஜை சென்னை லீலா பேலஸில் நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இஸ்லாமிய போலிஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பெங்களூர் சென்ற ரஜினிகாந்த் :

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென்று பெங்களூர் சென்றிருக்கிறார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பஸ் கண்டக்டராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் ஜெயா நகரில் உள்ள பிஎம்டிசி பஸ் டிப்போவில் தான் வேலை செய்திருந்தார். தற்போது இந்த பஸ் டிப்போவிற்கு தான் ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார். பின் ரஜினிகாந்த் அங்குள்ள ஊழியர்களிடம் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

அது மட்டும் இல்லாமல் அங்கிருந்தவர்கள் ரஜினிகாந்த் உடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார்கள். சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் உயர்ந்திருந்தாலும் தன்னை வளர்த்து விட்ட இடத்தை மறக்காமல் நேரில் சென்று பார்த்திருப்பது குறித்து பலருமே பாராட்டி இருக்கின்றனர். இதனை எடுத்து ரஜினி அவர்கள் சாமராஜ்பேட்டையில் உள்ள மந்திராலயா ராகவேந்திரா சாமி மடத்திற்கு சென்றிருக்கிறார்.

Advertisement