தம்பிக்கு நான் நடிப்பதே தெரியாது, ஆனா – ரஜினி அண்ணன் சத்ய நாராயணராவ் சொன்ன தகவல்

0
307
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயண ராவ் தற்போது சினிமாவில் களமிறங்கி இருக்கிறார். இலங்கையை சேர்ந்த இயக்குனர் ஏ.ஆர் ரசீம் என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாம்பழ திருடி’ என்ற படத்தில் தான் ரஜினியின் சகோதரர் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடித்திருப்பது பலருக்கும் சர்ப்ரைஸ் என்று தான் சொல்லணும். மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் சத்யநாராயண ராவ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எத்தனையோ இயக்குனர்கள் என்னை நடிக்க சொல்லி கேட்டிருந்தார்கள். நான் நடிப்பதற்கு பல ரெகமெண்டேஷன்கள் வந்தது. ஆனால், அப்போதெல்லாம் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை.

- Advertisement -

சத்யநாராயண ராவ் பேட்டி:

மாம்பழ திருடி படத்தினுடைய இயக்குனர் அவரோட அப்பா, அம்மாவோட வீட்டுக்கு வந்துவிட்டார். அதனால் தான் என்னால் தவிர்க்கவே முடியவில்லை. அப்போது இயக்குனர் என்னிடம் சொன்ன கதை ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு நடிப்பு என்பது புதிது. ஆனால், சூட்டிங்கில் நடித்த மாதிரியே தெரியவில்லை, ரொம்ப இயல்பாக பேசினதாக சொன்னார்கள். பெங்களூரில் இருக்கின்ற எங்கள் தோட்டத்துக்கே வந்து சூட் பண்ணார்கள். இந்த படத்தில் எனக்கு கெஸ்ட் ரோல் தான். ஆனால், ரொம்ப முக்கியமான கதாபாத்திரம்.

படம் குறித்து சொன்னது:

என்னுடைய வயதுக்கு தகுந்த மாதிரியான கதாபாத்திரம். மாம்பழ திருடி பட பிரஸ்மீட்டில் இயக்குனர் என்னை ரொம்ப புகழ்ந்து பேசியிருந்தார். ஏன் அப்படி புகழ்ந்தார்? என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் எல்லோரும் போல சாதாரண மனிதன் தான். நான் சினிமாவில் நடிக்கிறேன் என்பது தற்போது வரை என்னுடைய தம்பி ரஜினிக்கு தெரியாது. நான் அவரிடம் எதையும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஆனால், தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவார். அடிக்கடி தம்பி ரஜினியிடம் பேசுவேன்.

-விளம்பரம்-

ரஜினி குறித்து சொன்னது :

அவரும் அடிக்கடி எனக்கு போன் பண்ணி பேசுவார். நாங்கள் இருவரும் குடும்ப விழாக்களில் எல்லாம் கலந்து கொள்வோம். ஆனால், சினிமாவில் நடிப்பது பற்றி எதுவுமே சொல்லவில்லை. என்னுடைய தம்பி ரஜினியிடம் பிடித்தது அவர் கொடுக்கிற மரியாதை தான். சின்ன வயதிலிருந்தே அண்ணா என்று தான் அன்பாக கூப்பிடுவார். இப்ப வரைக்கும் அந்த வார்த்தை மாறவில்லை. சூப்பர் ஸ்டார் ஆகியும் என் மேல் இருக்கிற அன்பும், மரியாதையும் அப்படியே தான் இருக்கிறது. பழசை மறக்காதவர் ரஜனி.

ரஜினி படம் குறித்து சொன்னது:

என்னிடம் மட்டும் இல்லை எல்லோரிடமும் அப்படித்தான் நடந்து கொள்வார். அன்பு, கருணை, பாசம், நேசம், என்று அவர் மாதிரியான மனசுக்கு யாருக்குமே வராது. அப்படிப்பட்ட மகா மனிதன் எங்கள் குடும்பத்தில் பிறந்தது எங்களுக்கு பெரிய பாக்கியம். தம்பியோட படத்தில் எனக்கு ரொம்ப பிடித்தது என்றால் அண்ணாமலை படம், அதற்கடுத்து படையப்பா. உழைத்தால் எல்லோரும் முன்னேறலாம் என்ற உத்வேகத்தை கொடுக்கிற படம் என்பதால் அந்த படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Advertisement