தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
கன்டக்டர் ஆகும் முன் :
அது 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டு இருந்தார். மேலும், அந்த நிகழ்ச்சியை லதா ரஜினிகாந்த் தான் ஏற்பாடு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் நடிகனாக ஆவதற்கு முன் பல வேலைகளை செய்து இருக்கிறேன். நான் ஆபீஸ் பாய், கார்பெண்டர், கூலி வேலை என எந்த வேலை கிடைத்தாலும் செய்துவந்தேன்.
இதையும் பாருங்க : என்னது, நிவேதா பெத்துராஜ் தமிழில் இப்படியொரு சீரியல் நடித்துள்ளாரா ? – இது தெரியுமா ? இதோ புகைப்படம்.
ரஜினி அனுபவித்த வறுமை, பணக்கார கனவு :
அதற்குப் பிறகுதான் கண்டக்டர் தொழில் செய்தேன். எங்கள் குடும்பம் மிடில் கிளாஸ் என்று சொல்வதை விட ரொம்ப ஏழ்மையான குடும்பம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நாங்கள் வறுமையில் இருந்தோம். மேலும், வறுமையை பார்த்தேன் என்று சொல்வதை விட வறுமையை அனுபவித்து வாழ்ந்தேன். அதனால் தான் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் நான் போராடினேன்.
ரஜினி செய்துள்ள வேலைகள் :
அதனால் கூலி, கார்பெண்டர் போன்ற பல வேலைகளை செய்த பிறகுதான் கண்டக்டர் வேலைக்கு வந்தேன். அதன் மூலம் தான் நான் நடிகன் ஆனேன். அதேபோல் எனக்கு சின்ன வயதிலிருந்தே பூர்வ ஜென்ம புண்ணியமோ என்று தெரியவில்லை எதிலும் எந்த ஒரு பயமும் கிடையாது. ஆனால், ஒரே ஒரு முறை மட்டும் நான் பயந்து இருக்கிறேன். அப்போது பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட முடிவு செய்தேன். அப்போது தான் நான் இருந்த இடத்திற்கு பக்கத்தில் மலை ஒன்று இருந்தது. அந்த மலையில் ஒரு சாமியாரின் புகைப்படம் ஒன்று இருந்தது.
தற்கொலை எண்ணம் :
அதை பார்த்தவுடன் எனக்குள் மன அமைதி கிடைத்தது. பின் நானும் தற்கொலை செய்ய நினைக்கும் எண்ணத்தை தள்ளி போடலாம் என்று நினைத்து வீட்டிற்கு போய் விட்டேன். அப்போது நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என் கனவில் தாடி வைத்த காவி ஆடை அணிந்த நபர் ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருக்கிறார். நான் அவரிடம் செல்ல ஆற்றில் நீந்தாமல் ஓடி செல்கிறேன். உடனே விழித்துப் பார்த்தாள் அந்த புகைப்படத்தில் இருந்தவர் தான் என் கனவில் வந்தவர் என்று எனக்கு புரிகிறது.
கனவில் வந்த ராகவேந்திரா சாமி :
அதற்கு பிறகுதான் நான் அவருடைய பெயர் கேட்டதற்கு ராகவேந்திரா சாமி என்று சொன்னார்கள். அப்போதிலிருந்து நான் அவருக்காக விரதமிருந்து பூஜித்து வருகிறேன். இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு மோசமான நிலையில் ஒரு நல்ல நிகழ்வு நடைபெறும் என்று கூறி இருக்கிறார். இப்படி ரஜினிகாந்த் 29 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.