அரசியல் வாதிகள் செய்யும் ஊழல் பத்தி எடுத்த சிவாஜி படத்த கலைஞர் பாத்துட்டு – ரஜினி சொன்ன சுவாரசிய பிளாஸ்பேக்

0
298
- Advertisement -

கலைஞர் புத்தகம் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் ‘கலைஞர் என்று தாய்’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வரும் ஆன கருணாநிதி பற்றி திமுக அமைச்சர் எ.வ.வேலு புத்தகம் ஒன்று எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வெளியிடும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் திமுக அமைச்சர்கள் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் இந்த விழாவில் கலைஞர் புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் வாங்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பொதுவாகவே பள்ளியில் ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்களை கையாளுவதில் எந்த பிரச்சினையுமே கிடையாது. ஆனால், பழைய மாணவர்களை வழி நடத்துவது தான் கொஞ்சம் பிரச்சினையாக இருக்கும். அதுபோலத்தான் திமுகவில் அதிகமான அமைச்சர்கள் பழைய மாணவர்களாக உள்ளார்கள்.

- Advertisement -

விழாவில் ரஜினி சொன்னது:

அதிலும் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் தான் துரைமுருகன். அவர்களை கையாளுவதற்கு ஆட்ஸ் ஆப். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுமையும், அவருடைய உழைப்பும் தான் காரணம். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக ஸ்டாலின் அவர்கள் நடத்தி இருந்தார். வேறு யாருக்கும் அப்படி நடந்ததுமில்லை, நடக்கப் போவதுமில்லை.

அரசியல் குறித்து சொன்னது:

கலைஞருக்கு வந்த சோதனைகள் போல் வேறு யாருக்காவது வந்து இருந்தால் காணாமலே போயிருப்பார்கள். கலைஞருடைய புகழ் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அரசியலில் எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கலைஞர் கையாண்டார். ஆனாலும், சிலர் அவரைக் குறித்து தற்போதும் விமர்சனம் செய்து கொண்டுதான்இருக்கிறார்கள். அது பிறர் மனதை நோகடிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

-விளம்பரம்-

கலைஞர் குறித்து சொன்னது:

கலைஞரை போல் தற்போது யாரும் செய்தியாளர்களை சந்திப்பது இல்லை. சமூகத்துக்காக ரொம்பவே பாடுபட்டவர். அவரைப் பற்றி இன்னும் நிறைய புத்தகங்கள் எழுதலாம். திரைப்படம் கூட எடுக்கலாம். கலைஞருடைய பேச்சு வீணை போல ஒரு நேராகவே இருக்கும். சிவாஜி படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள். மொத்த அரசியல்வாதிகளை பற்றி விமர்சனம் செய்து, அரசாங்கத்தை விமர்சனம் செய்து, லஞ்சத்தை பற்றி சொல்லி எடுத்த படம்.

சிவாஜி படம் குறித்து சொன்னது:

அந்தக் கதை தெரிந்திருந்தும் கருணாநிதி அவர்கள் வந்து பார்த்தார். அப்போது படத்தை பார்த்த வைரமுத்து,
உங்களுக்கு ரொம்ப தைரியம். இந்த மாதிரியான படத்தை எடுத்து CM பக்கத்திலே உட்கார்ந்து பார்க்கிறீர்களே? என்று சொன்னார். படம் பார்த்த பின் கலைஞர், இந்த மாதிரி நிறைய விஷயங்கள் செய்ய ஆசையாக இருக்கு என்று பெருமூச்சு விட்டார். அந்த மூச்சில் பல ஆயிரம் விஷயங்கள் இருந்தது என்று கூறி இருந்தார்.

Advertisement