‘சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு’ மாமன்னனை பாராட்டி ரஜினிகாந்த் பதிவு

0
1503
- Advertisement -

மாமன்னன் படம் குறித்து ரஜினிகாந்த் பதிவிட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

படம் குறித்து சொன்னது:

மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் கிருத்திகா, உதயநிதியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். மேலும் படம் குறித்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படம் குறித்து ட்விட்டர் ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் ட்விட்:

மேலும் அதில் அவர், சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார். இதற்கு உதயநிதி பதில் டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர்,”சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு படக்குழு சார்பில் அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மாரி செல்வராஜ் கூறியது:

இவரை தொடர்ந்து மாரி செல்வராஜ், என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும், கர்ணனையும், பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும், பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement