கமலுக்கு எதிராக கோவை தொகுதியில் களமிறங்கும் ரஜினியின் மருமகன்? அதுவும் எந்த கட்சி சார்பாக தெரியுமா?

0
537
- Advertisement -

கோவை பாராளுமன்ற தொகுதியில் ரஜினியின் மருமகன் போட்டியிட இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தாங்கள் போட்டியிட இருக்கும் தொகுதிகளை கேட்டு வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகள் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. அதில் தங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கொடுத்திருக்கிறார்கள். அதேசமயம் திமுக கூட்டணியில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும் இணைந்திருக்கிறது.

- Advertisement -

பாராளுமன்ற தேர்தல் விவரம்:

இதுவரை மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குறித்து எந்த தகவலுமே வெளியாகவில்லை. இருந்தாலும் கோவை தொகுதியை மக்கள் நீதி மையம் குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. காரணம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி பெற்றிருந்தார்.

மக்கள் நீதி மையம் கட்சி:

மொத்தத்தில் கோவை தொகுதியில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி நல்ல வாக்குகள் பெற்றிருந்தது. இதனால் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று கமலஹாசன் நம்புகிறார். இதற்காகவே மக்கள் நீதி மையம் கட்சி கோவை தொகுதியை கேட்டு வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அதோடு திமுக கூட்டணியில் தங்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று கூட மக்கள் நீதி மையத்திற்கு தெரியவில்லை.

-விளம்பரம்-

தேர்தலில் நிற்கும் ரஜினி மருமகன்:

இப்படி இருக்கும் நிலையில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவை தொகுதியில் கமலை எதிர்த்து திமுக சார்பில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனை வேட்பாளராக களம் இறக்க இருப்பதாக கூறப்படுகிறது. பல்லடம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின் குடும்ப வாரிசு தான் ரஜினி மருமகன் விசாகன். பொன்முடியின் தம்பி தான் வணங்காமுடி. அவருடைய மகன் தான் விசாகன்.

ரஜினி மருமகன் தேர்தலில் நிற்க காரணம் :

இவர் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவை திருமணம் செய்து இருக்கிறார். மேலும், விசாகன் ரஜினியின் மருமகன் என்ற முறையிலும், திமுக குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற முறையிலும் பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் களம் இறக்க இருப்பதாக திமுக கட்சி தலைமை ஆலோசித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விசாகனை நிறுத்தினால் ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக வெற்றி அடைய செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement