ஒன்றரை வருடமா ‘லிவிங் டு கெதர்’.! காபி ஷாப், பீச்னு சுத்தினோம்.! இப்போ கணவன் மனைவி.!

0
1944
raj-and-kamal
- Advertisement -

விரும்பினால், மேஜரான ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமலேயே, ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கையை வாழ, அவர்களுக்கு உரிமை உள்ளது’ எனச் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். கேரளாவில் இப்படி வாழும் நந்தகுமார் – துஷாரா வழக்கின் மூலம்தான் இந்தத் தீர்ப்பு கிடைத்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பே ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை வாழ்ந்து, பிறகு தம்பதியராக இணைந்தவர்கள், சின்னத்திரை பிரபலங்கள் ராஜ்கமல் – லதாராவ் ஜோடி. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து இவர்களிடம் பேசினோம்.

-விளம்பரம்-

raj_latha

- Advertisement -

நாங்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடமா அப்படி வாழ்ந்தோம். ஆனா, ரெண்டு வீட்டோட சம்மததோடு நாங்க வாழ்ந்தோம்கிறதுதான், இதில் அழகு. சமூகம் இன்னைக்குக்கூட இதை ஏத்துக்குமா தெரியாது. ‘நல்ல குடும்பம்டா’னுதான் பேசுவாங்க. ஆனா, எங்க வீட்டுக்காரங்க எங்களை நம்பினாங்க.

சினிமா வாய்ப்பு தேடி சென்னையில தங்க வேண்டிய சூழல் வந்தப்போ, ‘பொண்ணு அங்கே தனியா இருக்கிறதைவிட, கல்யாணம் செஞ்சுக்கப்போறவரோட இருக்கிறதுல என்ன தப்பு’னு கேட்ட லதாவோட பெற்றோர், அதாவது என்னோட மாமனார் வீட்டை இந்த நேரத்துல நெகிழ்வோட நினைச்சுப் பார்க்கிறேன். ரியலி கிரேட். என் வீட்டிலேயும் நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ்றதுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கலை.

-விளம்பரம்-

raj kamal

அந்த ஒன்றரை வருட வாழ்க்கைதான், இன்றைய எங்களது சந்தோஷமான வாழ்க்கைக்கு அடித்தளம்னு சொல்வேன். மனைவி எனக்குக் காதலியா இருந்தப்போ காபி ஷாப், பீச்னு நாங்க எங்கே சுத்தினாலும், சாயங்காலம் ஆனா அவங்கவங்க வீட்டுக்குப் போயிடுவோம். அந்த நாள்கள்ல புற வாழ்க்கையிலயும் சரி, குணம், பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சுக்கிறதிலும் சரி… ஒருத்தவங்ளோட ஒரு பக்கம் மட்டுமே தெரியும். ஆனா, சேர்ந்து ஒரே வீட்டுக்குள்ள தங்குறப்போ அப்படியில்லை. காதலனா / காதலியா பார்த்தவங்க உண்மையிலேயே சேர்ந்து வாழணும்கிற ஆசையில இருக்காங்களா, அல்லது பழகுறதுக்கு வேற எதுவும் நோக்கம் இருக்காங்கிறது ஒருசில நாள்களிலேயே தெரிஞ்சிடும்.

நாங்க ரெண்டுபேரும் நூறு சதவிகிதம் தெளிவா இருந்தோம். என் மனசுல என்ன இருந்ததோ, அதே சிந்தனைதான் லதாவுக்கும் இருந்துச்சு. அதனாலதான், அந்த ஒன்றரை வருட வாழ்க்கையை சந்தோஷமா நகர்த்த முடிஞ்சது. ‘என்னைக்கு இருந்தாலும் கல்யாணம் செஞ்சுக்கப்போறோம்; காதலுக்கும் எதிர்ப்பு இல்லை. இப்படி இருக்கும்போது, எந்த விஷயத்துக்கும் எதுக்காக அவசரப்படணும்னு நினைச்சு வாழ்ந்ததுனால, இன்னைக்கு ‘ஆமா… நாங்க லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்தோம்’னு ஓபனா பேசுறோம்.

இன்னொரு விஷயம், லிவிங் டு கெதர் வாழ்க்கைங்கிறதையே இங்கே தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. ‘பழகுவோம்; விருப்பப்பட்டா சேர்ந்து வாழலாம், இல்லைனா பை பை சொல்லிடலாம்’ங்கிறதுக்கு இல்ல லிவிங் டு கெதர். இப்படிப் பேசுனா, திருமண வாழ்க்கையை புனிதமா கருதுகிற நம்ம நாட்டுப் பண்பாட்டுக்கு எதிரானது அது.

latha raj

உருகி உருகி காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிறவங்களே அடுத்த வருடம் விவாகரத்து கேட்டு நிற்கிற சம்பவங்கள் நிறைய நடக்கிற காலம் இது. நாங்க கல்யாணம் செஞ்சுக்காமலேயே சேர்ந்து வாழ்ந்த ஜோடி. சாதி, மதம் பார்க்காம கல்யாணம் பண்ணி, குழந்தை பிறந்து வளர்ந்து, வருடம் பல ஓடிடுச்சு. இன்னைக்கும் உதாரண தம்பதியா சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டுருக்கோமே!

அதுக்காக, எல்லோரையும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழுங்கனு சொல்லலை. அது சம்பந்தப்பட்டவங்களோட விருப்பம். இப்படி யாராவது வாழ்ந்தா அவங்களை வித்தியாசமா பார்க்கிறதோ, அவங்களைப் புறக்கணிக்கிறதையோ பண்ணாதீங்கனு மட்டும் கேட்டுக்கிறோம்” என்கிறார்கள், இருவரும்.

Advertisement