மெட்டிஒலி 2 சீரியல் குறித்து நடிகர் ராஜ்காந்த் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராஜ்காந்த். இவர் பல தொடர்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளி திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது மெட்டிஒலி சீரியல் தான். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை தொடர்ந்தும் இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய குடும்பத்தில் யாரும் மீடியா துறையை சேர்ந்தவர்கள் இல்லை. கல்லூரி படிக்கும் போது என்னுடைய கல்லூரியில் நிறைய ஸ்ட்ரைக் நடக்கும். அப்படி நடக்கும்போது எங்க போக வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் நாங்கள் படத்துக்கு போவோம்.
ராஜ்காந்த் அளித்த பேட்டி:
அப்படி ஒரு நாள் தான் பார்த்திபன் சாருடைய புதிய பாதை படம் பார்த்துவிட்டு பார்த்திபன் சார் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. அவரை பார்க்கணும் என்று முடிவு பண்ணி தான் என் நண்பர்களுடன் சென்னைக்கு முதன் முதலில் கிளம்பி வந்தேன். பின் பார்த்திபன் சாருடைய ரசிகர் மன்ற தலைவர் மூலமாக அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்து அவரை பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் அவரை சேலம் கூட்டிட்டு வந்து வெற்றி விழா எல்லாம் நடத்தி இருந்தோம். மேலும், அப்பாவிற்கு தெரிந்த தெரிந்தவர்கள் மூலமாக தான் பாரதிராஜா அலுவலகத்திற்கு வந்தேன். கலா மாஸ்டர் உடைய நடன குழுவில் சேர்ந்து நடனம் ஆட ஆரம்பிச்சேன்.
சினிமா பயணம்:
சண்டை பயிற்சியும் கற்றுக் கொண்டேன். அப்போது நான் நன்றாக நடனம் ஆடுகிறேன் என்று அக்கரை சீமையிலே என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிதான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால், பாரதிராஜா சார் உடைய படத்தில் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இன்னமும் எனக்கு இருக்கு. ஒரு நடிகராக இருந்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கணும் என்று என் அப்பா சொல்வார். அதேபோல் நான் வித்தியாசமாக என்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன். அப்படித்தான் நான் செலக்ட் பண்ணியும் நடித்துக் கொண்டு வருகிறேன்.
மெட்டி ஒலி சீரியல் குறித்து சொன்னது:
அதே போல் மெட்டி ஒலி சீரியல் கிடைத்தது நான் செய்த பாக்கியம். அதற்கு பிறகு நான் மேகலா பண்ணினேன். இன்னைக்கும் சின்னத்திரையில் ராஜ்காந்த் என்றால் பலருக்கும் தெரிவது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. மெட்டி ஒலி சீரியல் பெரிய அளவு ஹிட் கொடுக்கும் என்று எனக்கு தெரியாது. என்னை பொறுத்த வரைக்கும் திருமுருகன் சாரோட இயக்கத்தில் நடிக்கணும் என்று தான் ஆசைப்பட்டேன். அதேபோல் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது மெட்டிஒலி 2 சீரியல் ஆரம்பிக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். என்னிடமும் அதைப்பற்றி பேசினார்கள். அதற்கு நான் என்னைக்கு சூட்டிங் என்று சொல்லுங்கள்.
மெட்டி ஒலி 2 சீரியல்:
நான் வந்து விடுகிறேன் என்று சொல்கிறேன். ஏன்னா, எனக்கு அந்த கதைக்குள் போகணும் என்று ஆசை. அந்த சீரியல் சன் டிவியில் இதுவரைக்கும் மூன்று தடவை தான் டெலிகார்ட் செய்திருக்கிறார்கள். மூன்று தடவை பயங்கர ஹிட் ஆன சீரியல். எல்லோரும் எப்ப சூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று ஆர்வமாக இருக்கும். அந்த டீமில் நடித்தவர்கள் தான் இரண்டாவது பார்ட்டில் இருக்கப் போகிறார்கள். அதனால் முதல் சீசனுடைய லிங்க் இருக்கும். எப்படியும் இரண்டு மூன்று மாதத்தில் ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார்.