ரஜினி கமலுக்கு இணையாக 100 நாட்கள் ஓடிய ராஜ் கிரண் படங்களும் இருக்கிறது.!

0
1333
- Advertisement -

பத்தாம் வகுப்பு முடித்த கையோடு 1966-ல் 16 வயது இளைஞனாகச் சென்னை வந்தவர் ராஜ்கிரண். கிரசெண்ட் மூவீஸ் என்ற புகழ்பெற்ற படவிநியோக நிறுவனத்தில் 4 ரூபாய் 50 பைசா தினக்கூலியில் பிலிம் ரெப் வேலையில் சேர்ந்து, ‘நேர்வழி’ என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிவர்.

-விளம்பரம்-

பிலிம் ரெப்பாக ராஜ்கிரண் தரும் வசூல் அறிக்கை, திரையரங்கிலிருந்து வரும் வசூல் அறிக்கை இரண்டும் துல்லியமாக ஒத்துப்போகும். இதனால் நிறுவனம் இவருக்கு 150 ரூபாயாக மாத ஊதியத்தை உயர்த்தி, பதவி உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றை வழங்கியத. அப்படியே கொஞ்சம் சினிமா ஆர்வமும் ராஜ்கிரனுக்கு வந்தது.

- Advertisement -

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து திரைப்பட விநியோகிஸ்தராக வளம் வந்தார். ராமராஜன் நாயகனாக நடிக்க ‘ராசாவே உன்னை நம்பி’(1988) படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கினார் ராஜ்கிரண். இவர் தயாரித்த 5 படங்களில் இரண்டு 100 நாள் படங்கள். 3 வெள்ளிவிழாப் படங்கள். இவர் நடிக்க வருவதற்கு முன் தயாரிப்பாளராக இருக்கும்போதே இவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள்.

1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடித்த ‘என்ன பெத்த ராசா’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார். அதன் பின்னர் 1991 ஆம் ஆண்டு ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த ராஜ்கிரனின் ஒரு சில படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது. அவை என்னவென்பதை தற்போது பார்ப்போம்.

-விளம்பரம்-

1.என் ராசாவின் மனசிலே
2.எல்லாமே என் ராசாதான்
3.நந்தா
4.பாண்டவர் பூமி
5.சண்டகோழி
6.தவமாய் தவமிருந்து
7.பவர் பாண்டி

Advertisement