போலீஸாக சூரி, விஜய் சேதுபதிக்கு என்ன ரோல் தெரியுமா ? வெளியான வெற்றிமாறன் – சூரி படத்தின் போஸ்டர்கள்.

0
1462
soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடியனாக நுழைந்து பின்னர் ஹீரோ வானவர்கள் பலர் இருக்கிறார்கள் கவுண்டமணி செந்தில் துவங்கி விவேக் வடிவேலு வரை பலரும் காமெடியனாக நடித்து பின்னர் ஹீரோவாக நடித்தவர்தான் அந்த வகையில் தற்போது சூரியும் ஹீரோவாக களமிறங்குகிறார் அதுவும் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Image

 அசுரன் படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தில் முதலில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து, இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டனர். அத்திட்டம் கைவிடப்பட்டு, மீரான் மைதீன் எழுதிய ’அஜ்னபி’ என்ற நாவலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை உருவாக்கும் வேலையில் இறங்கினார் வெற்றிமாறன்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.. விடுதலை படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் போஸ்டர்களில் நடிகர் சூரி போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்

சூரி படத்தை முடித்தவுடன்தான், சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படமாகும். ‘அசுரன்’ படத்தைத் தயாரித்த தாணுவே, இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தினை சூரி படத்தை முடித்த பின்னர் தான் வெற்றிமாறன் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement