அப்பா ஆனார் ராம் சரண், திருமணமாகி 11 வருடங்களுக்கு பின் பிறந்த முதல் குழந்தை – கொண்டாட்டத்தில் சிரஞ்சீவி குடும்பம்.

0
2585
Ramcharan
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதோடு இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள். சமீபத்தில் தான் ராம் சரண் தந்தையாகும் செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் ராம் சரண் மனைவி உபாசனா அவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு திருமணம் ஆன மூன்றாவது நாளிலிருந்து நான் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். ஆனால், என்னுடைய கேரியரை தேர்வு செய்வதில் நான் பிஸியாக இருந்தேன். அதுமட்டுமில்லாமல் சரணும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.

- Advertisement -

10 ஆண்டுகள் கழித்து கர்ப்பம் :

அதோடு எங்களுடைய ரிலேஷன்ஷிப்பை மேம்படுத்துவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி இருந்தோம். இதனால் தான் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதமானது. இது நாங்கள் இருவருமே சேர்ந்து எடுத்த முடிவுதான். இப்போது நாங்கள் பெற்றோராக இருக்கிறோம். இதையும் நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. கர்ப்பம் அடைந்ததை முதலில் நான் சரண் இடம் சொன்னபோது என்னை அமைதியாக இருக்க சொல்லி அவர் அனைத்து சோதனைகளையும் செய்து உறுதிப்படுத்திய பின்னரே கொண்டாடினார். தற்போது நான் கர்ப்ப காலத்தை அனுபவித்து வருகிறேன்.

கொண்டாட்டத்தில் சிரஞ்சீவி குடும்பம் :

இந்த சமயங்களில் சரணுக்கும் எனக்கும் பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்துக்கான கோல்டன் குளோப் விருதுகள், ஆஸ்கர் விருதுகள் நான் கர்ப்பம் அடைந்த சமயத்தில் தான் கிடைத்தது. இது எங்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி இருந்தார். இருவரும் தங்கள் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் உபசனாவிற்கு பிரசவம் ஆகும் தேதியை மருத்துவர்கள் அறிவித்தனர்.

-விளம்பரம்-

வீட்டிற்கு வந்த மஹாலக்ஷ்மி :

இதையடுத்து முக்கியமான நேரத்தில் தனது மனைவி உபசனாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தனது படப்பிடிப்பு பணிகளை ராம் சரண் ரத்து செய்தார். குழந்தை பிறந்ததற்கு பிறகும் சில மாதங்கள் தனது மனைவி கூடவே இருந்து அவரை கவனித்துக்கொள்ள ராம் சரண் முடிவெடுத்திருந்தார். இப்படி ஒரு நிலையில் ராம் சரணுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதனால் சிரஞ்சீவி குடும்பமே மகிழ்ச்சியடைந்துள்ளது.

கேம் சேஞ்சர் திரைப்படம் :

ராம் சரண் இறுதியாக ராஜமௌலி இயக்கத்தில் ‘RRR’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் Pan இந்தியா அளவில் மாபெரும் வெற்றிகண்டதோடு இரண்டு ஆஸ்கர் விருதையும் தட்டி தூக்கியாது. இதனை தொடர்ந்து ராம் சரண், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘game Changer’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கி வருகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

Advertisement