19 ஆண்டுகள் கழித்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராமராஜன். ஹீரோ யார் தெரியுமா?

0
94877
ramarajan
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் ராமராஜன். இவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் இவரை ‘வசூல் சக்ரவர்த்தி’ என்றே அழைத்து வந்தனர். 1985-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’. இது தான் ராமராஜன் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் ஹீரோவாக பாண்டியன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘மருதாணி, ஹலோ யார் பேசுறது’ போன்ற படங்களை இயக்கினார் ராமராஜன்.

-விளம்பரம்-
அழகிரி கூறியது போல் ஸ்டாலின் ஒரு ...

அதன் பிறகு இயக்குநர் பணியுடன் நமது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த ராமராஜன், அடுத்ததாக ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். 1986-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’. இது தான் ராமராஜன் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் வி.அழகப்பன் இயக்கியிருந்தார்.

- Advertisement -

இதில் ராமராஜனுக்கு ஜோடியாக ரேகா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன், கிராமத்து மின்னல், ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவக்காரன், கரகாட்டக்காரன்’ என அடுத்தடுத்தது பல படங்களில் ஹீரோவாக நடித்தார் நடிகர் ராமராஜன்.

சின்னம்மா தான் அதிமுக தலைவியாக ...

ராமராஜன் நடிப்பில் கடைசியாக வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘மேதை’. இந்த படத்தினை இயக்குநர் N.TG. சரவணன் இயக்கியிருந்தார். இதில் ராமராஜனுக்கு ஜோடியாக கௌஷிகா நடித்திருந்தார். தற்போது, மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் இயக்குநர் சீட்டில் அமரப்போவதாக தகவல் வந்திருக்கிறது. அதுவும் இந்த திரைப்படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ ரொம்பவும் ஸ்பெஷல். ராமராஜன் இறுதியாக கடந்த 2001 ஆம் ஆண்டு சீறி வரும் காளை படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். அதுவும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இப்படத்தில் ஹீரோவாம். விஜய் சேதுபதிக்கு ராமராஜன் கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதால், அவர் உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். ஆனால், இந்த படத்தில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் ராமராஜன் நடிக்கப்போவதில்லையாம். இப்படத்திற்கு பிறகு இன்னும் சில திரைப்படங்களை இயக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ராமராஜன்.

Advertisement