விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் மற்றும் பல சினிமா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி ரம்யா. மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்திருந்தார்.
ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு ரம்யா தனது கணவரை பிரிந்து வந்து விட்டார்.
ரம்யாவிற்கு திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் ரம்யா. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா. தற்போது ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சில கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா என்று மோசமான கேள்வியை கேட்டார். அதற்கு ரம்யா, லெஸ்பியன்,கே, இருபாலர் என்று அனைவரையும் பிடிக்கும் எப்படி இருந்தால் என்ன பிரச்சனை என்று கோபமாக பதிலளித்துள்ளார்.