நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? – மனம் நொந்து பேசிய ராஷ்மிகா.

0
444
rashmika
- Advertisement -

எல்லா நடிகர்களும் சினிமாத்துறைக்கு வந்த சிறிதுகாலத்தில் பிரபலமாக ஆவதில்லை. ஆனால் புஷ்பா படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதும் ஏன் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சினிமாத்துறையில் வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் தெலுங்கு கன்னடம் என கலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிலும் இப்போது கலக்கி வருகிறார்.ராஷ்மிகா மந்தனா திரைத்துறையில் 2017ஆம் ஆண்டு வெளியான “கிர்க் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

-விளம்பரம்-

4கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படமானது 50கோடி வரை வசூல் செய்து ஹிட் அடித்து. அதனை தொடர்ந்து “சலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்க்கு சினிமாவிற்கு அறிமுகமாகிறார் ராஸ்மிகா மந்தனா. பின்பு இவர் நடித்திருந்த “கீதா கோவிந்தா” திரைப்படம் 15 மடங்கு லாபம் கொடுத்து மெகா ஹிட்அடித்தது. மேலும் இப்படத்திற்கு தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, என பல துறைகளில் பல விருதுகளையும் பெற்றது.

- Advertisement -
rashmika

இப்படி இவர் நடித்து வந்த படங்கள் எல்லாமே ஹிட் அடிக்கவே இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி தமிழிலும் பிரபலமானார். ஆனால் இவர் “பிகில்” படத்தில் நடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு பிறகு பல முன்னணி பிரபலங்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு என்று பலரின் படங்களில் நடித்து ஹிட் அடித்தார்.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி தயாரித்திருந்த திரைப்படமான “கிர்க் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்பாடத்தின் போதே ரக்சித் ஷெட்டி மற்றும் மந்தனா ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.இந்த காதல் நாளடைவில் இருவரும் நித்சயதார்தம் செய்து திருமணம் வரை சென்றது. பின்னர் ராஷ்மிகா நடித்த படங்கள் தெடர்ந்து வெற்றியடையவே திருமணத்தில் இருந்து விளக்கினார்.

-விளம்பரம்-
rashmika

இப்படி இருக்கும் போது ஏற்கனவே நடிகை ராஷ்மிகா முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டார் என்று கன்னட ரசிகர்கள் கோவமடைந்துள்ளார். அதாவது தற்போது கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிநடை போட்டுக்கொன்றிருக்கும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா” திரைப்படத்தை பற்றி பேசியதால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்ச்சனத்திற்கு உள்ளனர்.

இதனை தொடர்ந்து கன்னட ரசிகர்கள் பலரும் இவரை தொடர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா ”சில நேரங்களில் என உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகிறேன். நான் ஒர்கவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு, ஒர்கவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு. நான் ஓவராக பேசினாலும் கிரிஞ் என்று கூறுகிறார்கள். பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

rashmika

நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? இல்லை வேண்டாமா? என்னிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், என்னிடம் அதை தெளிவாக கூறிவிடுங்கள். என்ன தவறான முறையில் நினைக்காதீர்கள். உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக துன்புறுத்துகிறது ‘ என்று மனம் நொந்து பேசி இருக்கிறார்.

Advertisement