இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் இழுபறியில் இருந்த குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து வழிபடவும்.