யார் இந்த திருவண்ணாமலை ஊர்காரர் பவா செல்லத்துரை – பிக் பாஸ் பிரபலம் இவருக்கு அவசியம் தானா ?

0
1519
bava
- Advertisement -

தமிழ் நவீன சிறுகதைகளின் மொழியாலும் கதை மாந்தர்களாலும் கதைகள் முழுவதும் நிரம்பி வழி மனிதர்களின் பேரன்பாலும் கவனத்தைப் பெற்றவர்தான் எழுத்தாளர் பாவா செல்லதுரை. இவர் திரைப்பட நடிகர், எழுத்தாளர், இலக்கியவாதி, இயற்கை விவசாயி என்று பல முகங்களுக்கு சொந்தக்காரர் இவர். பாவா செல்லதுரை கம்பீரமான அதே நேரத்தில் சிநேகமான குரலிலும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. தற்போது அவர் பேட்டி ஒன்றிய அளித்துள்ளார்.

-விளம்பரம்-

அவர் கூறியது:

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன் முதலில் பாத பாட புத்தகங்களை தாண்டி இலக்கிய புத்தகங்களை வாசிக்கத்தோடு தொடங்கினேன். நான் முதன் முதலில் வாசித்த புத்தகம் என் பெயர் புத்தகத்தின் பெயர் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஒரு மனிதன் சில எருமை மாடுகளும் என்ற புத்தகம் தான். அந்தப் புத்தகம் தான் வாசப்பின் மீது தான் ருசியை எனக்கு முதல் முதலில் கொடுத்தது. அதன் பின் நான் கல்லூரியில் சேர்ந்தேன் நான் படித்தது பிகாம் தமிழ் ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள்தான் பாடப் புத்தகத்தில் மட்டும் தான் கவனம் செலுத்துவார்கள் அவர்கள் அதைத் தாண்டி பேர் புத்தகங்களை அதிகமாக வாசிப்பதில்லை. அதேபோல் தான் மற்ற துறையில் உள்ளவர்களும் அப்படி அல்ல.

- Advertisement -

அவர்களுக்கும் இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்புவும் மிக குறைவாகத்தான் இருக்கும். எனவே ஏதாவது புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இலக்கியம் படித்தவர்களை விட கணிதம் அறிவியல் வணிகப் படித்தவர்களுக்கு தான் அதிகமாக இருக்கும். எனவே நம்முடைய பாட புத்தகத்திற்கும் வாசிப்பதற்கும் சம்பந்தம் கிடையாது என்று நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன். எனது கல்லூரி நாட்களில் தான் நான் புத்தகங்களை அதிகமாக படித்து இலக்கியங்களை பிடித்தேன். இன்றும் நான் ஓர் எழுத்தாளர் தான். இன்றுவரையும் நாவலை எழுதுவதற்கு விடவில்லை. தற்பொழுது கூட ஒரு நாவலின் ஒரு பகுதியை எழுதி முடித்து விட்டு தந்து திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தேன்.

நான் கதை சொல்வது என்பது திட்டமிட்டு ஆரம்பிக்கவில்லை நானும் எனது நண்பரும் ஜேபியும் ஒரு நாள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தோம் அப்போது அவர் கூறினார் பேசி வரும் மணி நேரத்தில் என்னிடம் 12 கதையை கூறிவிட்டாய் என்று எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. மேலும் ஜேபி என்னிடம் கூறுகையில் இது பெரிய சம்பவம் அது உனக்கு தெரியவில்லை. இந்த கதை எல்லாம் நீ ஒரு கூட்டத்தில் சொல்லுங்கள் இப்போது நான் உங்களிடமிருந்து 12 கதைகளை கேட்டேன். இது ஏன் ஒரு கூட்டத்தில் 50 பேர் கேட்கக்கூடாது என்று என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது.

-விளம்பரம்-

நான் அனைத்து கதையையும் அப்படி வாசிப்பதில்லை. அந்த ஒரு கதையை மட்டும்தான் வாசித்தேன். இருப்பினும், அந்த கதை பலருக்கும் பிடித்திருந்தது. அந்த கதையை யூ டியூப்பில் 20,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.கதைகளுக்குள்ளாக வாழ்வது என்று ஒன்று இருக்கிறது. கதை சொல்வது கேளிக்கை ஊட்டுவது இல்லை. ஒரு முறை நான் ஜெயமோகனிடம் பேசும்போது நான் கதை சொல்வதை நிறுத்திவிடப் போகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் ஏன் என்று கேட்டார். நான், நீங்கள் எல்லாம் நிறைய எழுதுகிறீர்கள். நான் வெறும் கதை சொல்லியாக மாறிவிடுவேனோ என்று தோன்றியது.

என்னுடைய அம்மா சிறு வயதில் இருக்கும் போது நிறைய கதை சொல்வார் அதிகமான கதைகளை கேட்டது ஒன்று ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லையா அப்போதுதான் கதை சொல்லத் தொடங்கினேன். நான் தமிழ்நாட்டில் ஏராளமான ஊர்களிலும் வளைகுடா நாடுகளில் சிங்கப்பூர் மலேசியா என பல்வேறு பகுதிகளுக்கு சென்று கதை சொல்லி இருக்கின்றேன் வரும் சோளையில் அமெரிக்கா செல்ல உள்ளேன்.

அதனை தொடர்ந்து ஐரோப்பா செல்கிறேன் யார் கூப்பிட்டாலும் கதை சொல்ல கிளம்பி விடுவேன் என்று அவர் கூறியிருந்தார். அவர் தற்போது நடைபெறவிருக்கும் பிக் பாஸ் 7வில் கலந்துகொடுள்ளார். இந்த சீசனில் அதிக வயதுடைய நபர் இவர் தான். பொதுவாக வயதானவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறுவார்கள். அந்த வகையில் இவர் முதல் வாரம் நிலைப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement