எனக்கு முன்னாடி அதில் விழுந்த 13 பேர் உயிர் பிழைகளா – ரியல் லைஃப் மஞ்சுமேல் பாய் சொன்ன உறைய வைக்கும் கதை.

0
604
- Advertisement -

கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே மஞ்சுமெல் பாய்ஸ் படம் குறித்து தான். மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் கேரளாவில் மஞ்சுமெல் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றார்கள். அங்கு குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கி கொள்கிறார். அவருடன் வந்த நண்பர்கள் எப்படி அவரை காப்பாற்றுகிறார்கள் என்பதை படத்தின் கதை. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. . நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

மேலும்,ஹைதராபாத் பகுதியில் அண்டர் கிரவுண்டில் 17 அடி ஆழத்தில் செட் அமைத்து இந்த படப்பிடிப்பினை நடத்தி இருக்கிறார்கள். காரணம், அந்த குணா குகையின் ஆபத்தை அறிந்து யாருமே அங்கு போகவில்லை. அந்தக் குழியில் விழுந்தால் யாருமே உயிர் பிழைத்ததே கிடையாது. ஆனால், எர்ணாகுளத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் மட்டும் அந்த குழியில் விழுந்து உயிர் பிழைத்து இருக்கிறார்., ஆனால் இது எப்படி என்று தான் தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து சுபாஷ், படத்தில் சொல்லப்பட்டது போல் 120 அடி குழியில் விழவில்லை. 60 அடி குளியிலேயே நான் சிக்கிக்கொண்டேன்.

சுபாஷ் மற்றும் சிஜு

சுபாஷ் பேட்டி:

அது ஃப்ரீசர் பெட்டியில் மாட்டிக் கொண்ட மாதிரி உறவைக்கும் குளிர், வௌவ்வால்களின் சத்தம். இவை அனைத்தும் என் சாவை கண்முன்னே கொண்டு வந்தது. அப்போது எனக்கு இருந்த ஒரே ஆறுதல் என் நண்பர்களுடைய குரல் மட்டும் தான். அங்கே விழுந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்ததே இல்லை என்று சொன்னதெல்லாம் எனக்கு நினைவிற்கு வந்தது. என்னை போல குழியில் ஏதோ ஒரு குழியில் மாட்டிக் கொண்டு உணவும், தண்ணீரும் இல்லாமல் நரக வேதனை அனுபவத்து இறந்திருப்பதற்கான வாய்ப்பு தான் அதிகம்.

-விளம்பரம்-

குகை குறித்து சொன்னது:

காரணம், அது ஒரு நேரான குழி கிடையாது. அம்யூஸ்மென்ட் பார்க்கில் இருக்கும் நீர் சறுக்கு குழாயில் செல்லும் வளைவுகளைப் போல தான் அது இருக்கிறது. உள்ளே விழுபவர்கள் இடையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நான் விழுந்து 15 நிமிடங்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்போது மழையும் பெய்து கொண்டிருந்தது. மழை நின்ற பின்னர் பயர் ஆபீஸ் நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் கயிற்றை மற்றும் குழிக்குள் விட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். நான் குழிக்குள்ளே கத்திக் கொண்டிருந்தேன். பின் என்னுடைய நண்பர் சிஜூ குழிக்குள் இறங்கி இறங்கினார்.

குழிக்குள் விழுந்த அனுபவம்:

அவனுடைய சத்தம் கேட்டதும் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்து. ஒரு வழியாக அவன் என்னை கண்டுபிடித்து விட்டான். பின் கயிற்றைக் கட்டி என்னை தூக்கினார்கள். மேலே செல்லும் போது ஒரு இடத்தில் இருவருமே மாற்றிக்கொண்டோம். இருந்தும் விடாமுயற்சியுடன் எங்களுடைய முழு பலத்தையும் காட்டி மேலே வந்தோம். வெளிச்சத்தை பார்த்த பிறகு தான் உயிரே வந்தது. இன்றும் எனக்கு அது மிராக்கள் போல தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement