ஷகீலாவால் ஏற்பட்ட Twist, நடுவர்களை கடுப்பேற்றிய ஷிவாங்கி. Dishஐ சுதபியதால் கடைசியில் இப்படி ஆகிட்டார்.

0
641
Shakeela
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-
Shivangi

இந்த சீசனில் இதுவரை கிஷோர், காளையன், ராஜ் ஐயப்பா, vj விஷால் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த சீசன் ஆரம்பம் முதலே ஷிவாங்கி வெளியேறியாமல் இருப்பது தான் அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொடக்கத்தில் இருந்து மூன்று சீசன்கள் வரை சமையல் பொருட்களின் பெயர் கூட தெரியாதமல் இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் இத்தனை வாரங்கள் வெளியேறாமல் இருப்பது ஆச்சரியம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த சீஸனின் இம்யூனிட்டி சுற்று இன்று நடைபெற்றது. இதில் இம்யூனிட்டியை வென்ற நபர் அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துவிடுவார். ஆனால், மற்ற சீசன்களில் இருந்து வந்துள்ள மூன்று போட்டியாளர்களில் யாரவது ஒருவர் இம்யூனிட்டியை வென்றுவிட்டால் சீசன் 4ல் உள்ள அனைத்து போட்டியாளர்களும் அடுத்த வாரம் நேரடியாக எலிமினேஷன் சுற்றுக்கு செல்வார்கள் என நடுவர்கள் அறிவித்தார்கள். இம்யூனிட்டி சுற்று முதலாவதாக நடைபெற்ற அட்வான்டேஜ் டாஸ்க்கில் ரோஷினி மற்றும் குரைஷி வென்றனர்.

இதன்பின், இன்று நடைபெற்ற இம்யூனிட்டி டாஸ்க்கில் முதல் சுற்றை நன்றாக சமைத்து அதிக மதிப்பெண்களை பெற்ற நான்கு போட்டியாளர்கள் இரண்டாம் சுற்றுக்கு சென்றார். விசித்திரா, சிவாங்கி, ஷகீலா மற்றும் ஷெரின் ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் இரண்டாம் சுற்றுக்கு சென்றனர். இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு காய்கறி சமைக்க கிடைத்தது.

-விளம்பரம்-

ஆனால், சிவாங்கி தனக்கு பாவற்காய் வந்துவிட்டது என்றும், தன்னால் பாவற்காய்யை சமைக்க முடியாது என்றும் இந்த இம்யூனிட்டி சுற்றில் இருந்து நான் வெளியேறிக்கொள்கிறேன் என்றும் கூறினார். இதனால் கடுப்பான தாமு,இது ஒரு போட்டி என்ன சமைக்க கொடுத்தாலும் ஏத்துக்கணும் நான் சமைக்க மாட்டேன் என சொல்ல கூடாது. இப்படி அடம்பிடித்து எங்களை கோபப்பட வைக்காதீங்க என்றும் கூறினார்.

பின்னர் வேறு வழியில்லாமல் ஷிவாங்கி இந்த டாஸ்க்கை செய்தார். பின்னர் இறுதியில் இம்யூனிட்டி சுற்றில் நடுவர்களிடம் இருந்து நல்ல மதிப்பெண்களை பெற்று ஷகீலா வென்றார். இதனால் இந்த சீசனில் பங்கேற்ற அனைவரும் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் எலிமினேஷன் சுற்றுக்கு சென்றுவிட்டனர். ஷகீலா இம்யூனிட்டியை வென்றதும் அனைவரும் சென்று பாராட்டினார். ஆனால், ஷிவாங்கி மட்டும் இரண்டாம் டாஸ்க் முதலே முகம் வாடியே காணப்பட்டார்.

Advertisement