தமிழ் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் என இரு பெரும் நடிகர்களின் படங்களான வாரிசு மற்றும் துணிவு என இரண்டுமே ஒரே நாளில் மோதவிருக்கின்றன. மேலும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரின் படங்களும் ஒன்றாக வரும் பொங்கல் 11ஆம் தேதி ஒன்றாக வெளியாவதினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
ட்ரைலர் வெளியாவதில் தாமதம் :
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது வாரிசு வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகும் படக்குழுவிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. சரி வரும் பொங்கலுக்கு இரு படங்களும் வெளியாகும் என்பதினால் ட்ரைலர் கண்டிப்பாக வெளியாகும் என்றிருந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு படக்குழுவினர் இருவரும் பொறுமையாகவே இருந்தனர்.
வாரிசு ட்ரைலர் :
கடைசியாக அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரைலர் கடந்த 31ஆம் தேதி டிசம்பர் மாதம் வெளியாகியது. இதனால் துணிவு படத்தில் வெளியிட்டு நாள் அப்போது சொல்லப்படுமென்று எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களை ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் வாரிசு படத்தின் ட்ரைலர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் 4ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த ட்ரைலரிலும் திரையில் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை.
விஜய் வைத்த ட்விஸ்ட் :
டீ கடை காமெடியை போல இவர்கள் அறிவிக்கட்டும், அவர்கள் அறிவிக்கட்டும் என்று போட்டி போட்டு கொண்டுகொண்டிருந்த நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் 4ஆம் தேதி வெளியாகியது. இதனை அடுத்தே துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு படம் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார். ஆனால் இங்கே தான் விஜய் ஒரு ட்விஸ்ட் செய்து வாரிசு படமும் 11ஆம் தேதி வெளியாக வேண்டும் என்று வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கேட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
அடம்பிடித்த விஜய் :
தில் ராஜு சம்மதித்தாலும் வெளிநாட்டில் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் ஏற்கனவே வழங்கப்பட்டதினால், தேதியை மாற்ற முடியாது என்ற காரணத்தினால் தில் ராஜு நடிகர் விஜய்யிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் விஜய் வாரிசு படம் கண்டிப்பாக 11ஆம் தேதி துணிவுடன் வெளியாக வேண்டும் என்று குறியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தில் ராஜும் வேறு வழியில்லாமல் 11ஆம் தேதி வாரிசு படம் வெளியாகும் என்று அறிவித்ததாக கூறப்படுகிறது. என்னவாக இருந்தாலும் ரசிகர்களாகிய நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும் எந்த படம் இந்த வருடம் பொங்களை கொண்டாட போகிறது என்று.