உண்மை கதையான ரெபல் படம் ஜிவி பிரகாஷிற்கு கை கொடுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

0
520
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். இன்று இவருடைய நடிப்பில் வெளியாகிருக்கும் படம் ரெபல். இந்த படத்தை இயக்குனர் நிகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

80 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் கல்லூரியில் போராடும் அவல நிலைதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவனாக இருக்கிறார். இவர் மூணாறில் இருந்து கேரளா கல்லூரியில் சேர்கிறார். ஜிவி பிரகாஷ் உடன் அவருடைய நண்பர்களும் கல்லூரிக்கு செல்கிறார்கள்.

- Advertisement -

கேரளா கல்லூரியில் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை என பலருமே தமிழர்களை இழிவாக நடத்துகிறார்கள். அப்போது மலையாள ஹீரோயினியாக மமிதா பைஜி வருகிறார். இவர் ஹீரோ ஜிவி பிரகாஷை காதலிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் தமிழர்களை மலையாளிகள் மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஹீரோவும் அவருடைய நண்பர்களும் திருப்பி பதில் கொடுத்தார்களா? இல்லையா? இதனால் என்னென்ன பிரச்சனை வருகிறது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கல்லூரி மாணவராகவும், ஆக்சன் காட்சிகளிலும் ஜிவி பிரகாஷ் நன்றாக நடித்திருக்கிறார். பின்னணி இசையும் இவரே போட்டிருப்பதால் சிறப்பாக இருக்கிறது. இவரை அடுத்து கதாநாயகியாக வரும் மமிதா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நடிகர்களுடைய தேர்வு படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல் உண்மை கதை என்பதால் இயக்குனர் அதிகமாக உழைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.
ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜி வி பிரகாஷ்க்கு இது ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிறை:

ஜிவி பிரகாஷ் நடிப்பு நன்றாக இருக்கிறது

கதைக்களம் அருமை

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது

நடிகர்கள் தேர்வு நன்றாக இருக்கிறது

குறை:

இரண்டாம் பாதியில் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

ஹீரோயினி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொஞ்சம் கொடுத்திருக்கலாம்

இறுதி அலசல்:

மொத்தத்தில் ரெபல் – நல்ல முயற்சி

Advertisement