தொடர்ந்து எழுந்த உருவக் கேலி கமெண்ட்ஸ் – ஆவேசத்தில் பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட வீடியோ

0
2314
- Advertisement -

பாடி ஷேமிங் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. “புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து இருந்தார் . இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானர்.

-விளம்பரம்-

அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார். ஆனால், இவர் இதற்கு முன்பு தெலுங்கு சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதோடு இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

- Advertisement -

ரேஷ்மா குறித்த தகவல்:

முதல் படத்திலேயே இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் சில படங்களில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் சீரியல்கள் மற்றும் படங்களில் ரேஷ்மா பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா நடிக்கிறார்.

ரேஷ்மா நடிக்கும் சீரியல்கள்:

இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் ரேஷ்மாக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார்.

-விளம்பரம்-

ரேஷ்மா பதிவிட்ட வீடியோ:

சமீபத்தில் விமல் நடிப்பில் வெளிவந்த விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் பாடி ஷேமிங் குறித்து ரேஷ்மா பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், ஒருவருடைய உடல் உருவமைப்பை குறித்து பேசுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, அனுமதியும் கிடையாது. இது ரொம்ப மோசமான செயல்.

பாடி ஷேமிங் குறித்து சொன்னது:

நல்ல நல்ல மெசேஜ் தான் இந்த உலகிற்கு கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் ஒருவருடைய உருவத்தை கேலி செய்து பதிவிட கூடாது. இந்த மாதிரி நெகட்டிவ் விஷயங்களால் பல பேர் மனதளவாளும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதை அறிந்து கொண்டு கருத்துக்களை பதிவிட வேண்டும். அடுத்தவர்களுடைய மனதை நோகடிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். இதை நான் என்னுடைய வேண்டுகோளாகவே வைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement