ரெட்ரோ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் நடிகர் சூர்யா செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ரெட்ரோ. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2D மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
ரெட்ரோ படம்:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுவரை இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக பட குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர் எல்லோருமே கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். ரெட்ரோ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் அகரம் பவுண்டேசனுக்கு 10 கோடி ரூபாயை சூர்யா கொடுத்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக சூர்யா வெளியிட்ட கடிதத்தில், பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி.

படத்தின் வெற்றி:
நடிகனாக எனக்கு அடையாளத்தை கொடுத்து என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திற்கு
என்னுடைய வெற்றியை பகிர்ந்து கொள்வது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. ரெட்ரோ படத்திற்கு நீங்கள் அளித்த பேர் ஆதரவு மகிழ்ச்சியான வெற்றியை பரிசளித்து இருக்கிறது. கஷ்டமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீட்டெடுக்க துணை நின்று இருக்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும் அன்பான தம்பி, தங்கைகளுக்கும் என் மனமாற நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் பவுன்டேசன் தொடங்கப்பட்டது.
View this post on Instagram
சூர்யா நன்கொடை:
உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக தான் அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல்லாயிரம் மாணவர்களுடைய வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கையோடு அகரம் பவுண்டேஷனுக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால், அதில் மிக குறைவான மாணவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனில் பங்களிப்பும் உயர வேண்டும்.
View this post on Instagram
அகரம் பவுண்டேசன்:
அதன் முதல் படியாக ரெட்ரோ படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில் 10 கோடி ரூபாயை இந்த கல்வி ஆண்டில் அகரம் பவுண்டேசனுக்கு கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உயர் கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு கொடுப்போம். கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம் என்று கூறியிருக்கிறார். தற்போது சூர்யாவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.






