படகு நிறுத்த அரசு இடத்தை ஆக்கிரமித்த பிரபல நடிகர் ! இடித்து தள்ளிய அதிகாரிகள் ! யார் தெரியுமா

0
841

பிரபல மலையாள நடிகரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளியது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மலையாள நடிகர் ஜெய்சூர்யா அங்கே ஒரு பிரபலமான நடிகர்.நடிகர் என்பதையும் தாண்டி இவர் ஒரு பின்னணி பாடகர்,தயாரிப்பாளர் போன்ற பல துறைகளில் சம்மந்தபட்டவர்.1978 இல் கேரள மாநிலம் கொச்சியில் பிறந்த ஜெய்சூர்யா இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

jayasurya

தற்போது கொச்சியில் தனது சொந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்.ஒரு ஏரிக்கு அருகில் இவர் வீடு அமைந்திருந்ததால் வீட்டின் ஒரு புறம் சுமார் 300 சென்ட் அளவில் படகு சவாரி செய்வதர்காக ஒரு படகு பாதையை காட்டியுள்ளார். ஆனால் அது அரசாங்கத்திற்கு சொந்தமான இடம் என்பதால் கொச்சின் கார்பொரேஷன் வாரியம் கடந்த புதன்கிழமை அன்று இடித்துதள்ளியது.

இதுகுறித்து கொச்சின் கார்பொரேடியின் அதிகாரி திரு .ஏ. எஸ்.அனுஜா தெரிவிக்கையில் கிரீஸ் என்ற நபர் அளித்த பொது நல வழக்கின் அடிப்படையில் நாங்கள் விசாரித்த பின்னரே அவரின் ஆக்கிரமிப்பை அகற்றினோம் என்று தெரிவித்திருந்தார்.ஒரு பெரிய நடிகரின் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது கேரளா சினிமா ரசிகர்களிடம் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.