Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விமர்சனம்2019.09.20பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 3 நிமிடம்

ஒத்த செருப்பு - விமர்சனம்.!

எழுதியவர்Rajkumar20 செப்டம்பர், 2019 அன்று 04:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா திரை உலகில் வித்தியாசமான முயற்சியில் படங்களை கொடுத்து சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் நடிகராகவும், இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கூட சினிமா துறையில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக " ஒத்த செருப்பு சைஸ் 7" என்ற படத்தை நடித்தும் , இயக்கியும் உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

Related image

கதைக்களம் :

படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் தான், மற்ற கதாபாத்திரங்களின் முகம், உடல் எதுவும் காட்டவில்லை. அவர்களின் குரல் மட்டும் தான் மற்றும் அவர்களை உணர்த்தும் வகையில் பொருட்கள் காட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மொபைல் பேசி அழைப்பு வந்தால் போனை காட்டுவதும், பெண் டாக்டர் என்றால் ஹாண்ட் பேக் காட்டுவது போன்ற சின்னச்சின்ன நுணுக்கங்களையும் கவனமாக கையாண்டு உள்ளார் நடிகர் பார்த்திபன்.அப்படி என்ன கதை ஒருத்தர் மட்டும் வைத்துபடம் எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால்? பார்த்திபன் ஒரு சாதாரணமான நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவருக்கு ஒரு கிராமத்து மனைவியும், என்னவென்றே தெரியாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தை.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சீசன் 4- ன் தொகுப்பாளர் சிம்புவா ? அதிகராபூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி.!

பார்த்திபன் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து வாட்ச்மன் வேலை செய்பவர். தான் வேலை செய்யும் இடத்திலேயே தன்னுடைய மனைவிக்கும் வேலை வாங்கிக் கொடுக்கிறார். இவர்கள் இருவரின் நோக்கமும் தன்னுடைய மகனை எப்படியாவது இந்த நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் என்பதுதான். வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய மனைவிக்கு ஏற்படும் இன்னல்களும், அவலங்களும் குறித்து கூறி உள்ளார். இதற்கிடையே பல கொலைகளும் நடந்துள்ளன.திடீரென்று ஒரு கொலை செய்துவிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்திபனை அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர் டெபுடி கமிஷனர். அந்த விசாரணையில் பார்த்திபன் ஒரு கொலை மட்டும் செய்யவில்லை நிறைய சில கொலைகளை செய்து இருக்கிறார் என்று அவரே கூறுகிறார். என்ன காரணத்தால் அவர் கொலை செய்து கொண்டு வருகிறார்? இப்படி கொலைகளை செய்யும் இடத்தில் தடயமாக ஒத்த செருப்பு உள்ளது. யாருடைய செருப்பு? யாரை கொலை செய்கிறார் ? ஏன் கொலைகளை பார்த்திபன் செய்கிறார்? அவருடைய மனைவியை எப்படி காப்பாற்றுவார்? தன் மகனை காப்பாற்றுவாரா ? என்பது தான் மீதி கதை.

இந்த படத்தில் அதிக அளவு முதலீடு போடாமல் சிம்பிளாகவும், பல சுவாரசியமான காட்சிகளையும் வைத்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் பின்னணி இசையின் மூலம் அதிகமாக மக்களை ஈர்க்கிறது. படம் முழுக்க ஒரே கதாபாத்திரமாக இருந்தாலும் மற்றவர்கள் சொல்ல விரும்பும் கருத்தை தன் நடிப்பின் மூலம் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார். அடுத்தது என்ன? என்ன? என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவில் படத்தை கொண்டு சென்றுள்ளார். இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு பக்கபலமாக அமைந்தது இசைதான். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் நான்கு நிமிடங்கள் எடுக்கப்பட்டதாகும் .

தமிழ் சினிமா துறையில் சினிமா துறையில் அதிக முதலீடு இல்லாமல் எவ்வளவோ படம் வெளி வந்து வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த படம் அதிக அளவு வெற்றி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமூகத்தில் ஒரு சாதாரண நடுத்தர தனிமனிதன் வாழ்க்கையில் நடக்கும் அவலங்களையும், கொடுமைகளையும் வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 உருவாகியுள்ளது. இந்த படத்தில் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார். ஆனால் அவர் தான் வெற்றி பெறுவார். அது யாரென்று தெரிவது தான் கதையின் சுவாரஸ்யமே.

Image result for otha seruppu

பிளஸ் :

இந்த படத்தில் சிம்பிளான மேக்கப், ஒரே காஸ்ட்யூம் இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியும் நான்கு நிமிடம் என்பதன் மூலம் அவர் எந்த அளவுக்கு உழைப்பு போட்டு எடுத்து இருப்பார் என்பது தெரிகிறது.

படத்தின் பட்ஜட் குறைவு.

படத்தின் இசை மக்கள் அனைவரையும் ஈர்த்தது.

மைனஸ்

படம் முழுக்க ஒரே கதாபாத்திரம் என்பதால் போரடிக்கும், இன்னும் கொஞ்சம் கதாபாத்திரங்களைக் கொண்டு வந்து இருந்தால் நன்றாக இருக்கும்.

காமெடி சீன்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

படத்திற்கான லொகேஷன் வித்தியாசமாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

இதையும் பாருங்க : காப்பான் – விமர்சனம்.!

இறுதி அலசல் :

பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான படங்களிலேயே இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தனி மரம் தோப்பாகாது என்ற பழமொழியை உடைத்தெறிந்து விட்டு இந்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படம் நிற்கிறது. ஒன் மேன் ஆர்மி என்பதுபோல பார்த்திபன் மொத்தத்தில் ஒரு ஒன் மேன் ஹீரோ தான் என்று நிரூபித்து விட்டார்.

தலைப்புகள்
#Oththa Seruppu#ஒத்த செருப்பு#ஒத்த செருப்பு விமர்சனம்#Oththa Seruppu Review
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement