அம்மா ஜெயலலிதா வேடத்தில் நடிக்கணும்..! பிரபல நடிகையின் ஆசை..! புகைப்படம் உள்ளே

0
578

பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Rima-Kallingal

இந்தப்படத்தில் சிறப்பாக நடித்ததற்க்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ஆந்திர மாநிலத்தின் பாராட்டை பெற்றதுடன், இந்த படத்தில் நடித்ததற்க்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரிபாபு நாயுடுவின் கையில் விருதையும் பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிடம், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை கீர்த்தி சுரேஷ், கண்டிப்பாக முடியாது ஏற்கனவே “நடிகையர் திலகம்” படத்தில் நடிகை சாவித்ரியின் வேடத்தில் நடிக்க தான் மிகவும் சிரமபட்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் அழுதே விட்டதாகவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருந்தார். இதனால் தான் இனிமேல் இது போன்ற படங்களில் தான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
Yuvan-Yuvathi

இந்நிலையில் அந்த படத்தில் மலையாள நடிகை ரீமா கலிங்கள் தான் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மலையாள நடிகையான இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான “யுவன் யுவதி ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.