படத்துல என்ன எந்த விதத்துல பாத்தீங்க – பத்திரிகையாளர் கேள்வியால் கடுப்பான ரித்விகா.

0
402
- Advertisement -

செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கடுப்பாகி நடிகை ரித்விகா கொடுத்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரிய அளவு பிரபலமானவர் நடிகை ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘பரதேசி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்பதற்கான விருதையும் பெற்றார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் தொடர்ச்சியாக இவர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் இவருக்கு 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகா சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னரும் ஆனார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்தார். அந்த வகையில் இவர் கடைசி உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ரித்விகா குறித்த தகவல்:

அதோடு பிக் பாஸ் வெற்றி கோப்பையை தட்டிச் சென்றதால் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி ஹீரோயினாக இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும், இவர் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தீபாவளி போனஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜெயபால் என்பவர் இயக்குகிறார்.

ரித்விகா நடிக்கும் படம்:

இந்த படத்தை ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி ப்ரொடக்ஷன் சார்பில் தீபக் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களையும், தீபாவளி போன்ற பண்டிகைகள் போது அவர்கள் படும் துன்பங்களையும் வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டிருந்தது. படம் பார்த்து முடித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு படக்குழுவினரிடம் பதில் அளித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் கேள்வி:

அப்போது ரித்விகாவிடம், ரொம்ப நாளா உங்களை சினிமா துறையில் காண முடியவில்லை. பிக் பாஸில் இருந்து வெளிவர முடியவில்லையா? பொருத்தமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரித்விகா, நான் இங்கு தான் இருக்கிறேன். நீங்க பாலோ பண்றீங்களா என்று தெரியவில்லை. பிக் பாஸ்க்கு பிறகு நிறைய படங்கள் பண்ணிவிட்டேன். அதில் 5 படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அது ரிலீசான தானே உங்களுக்கு தெரியும். பிக் பாஸ் முடிந்த பிறகு நான் காணவில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

ரித்விகா கொடுத்த பதிலடி:

நான் பிக் பாஸ் முடித்து ஏழு வருடம் ஆகிவிட்டது. அதற்கு பிறகு இன்ஜினியரிங் காலேஜ் போல நிறைய பேர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய் வெளியே விட்டார்கள். எல்லோருமே அவரவர்கள் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நீங்கள் எல்லோரையும் ஃபாலோ பண்ணா உங்களுக்கு அப்டேட் தெரியும் என்று கூறியிருந்தார். உடனே செய்தியாளர் ஒருவர், உங்க ஐந்து படமும் வெளிவரட்டும். அதை பார்த்து ரிவியூ கொடுக்கிறோம் என்று சொன்னவுடன் ரித்விகா, பிக்பாஸுக்கு பிறகு கடைசி உலகப் போரின் கடைசி குண்டு படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதை பார்த்தீங்களா? என்று கேட்டிருந்தார். அதற்கு அந்த செய்தியாளர், படத்தை பார்த்தோம். ஆனால், நீங்க வெளியே தெரியவில்லை என்று கூறியிருந்தார். உடனே ரித்விகா, நீங்க எந்த விதத்தில் பார்த்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை என்று கடுப்பில் பேசி மைக்கை வைத்து விட்டார்.

Advertisement