கார் கூட ஓட்ட தெரியாம எதுக்கு நடிக்க வரீங்கனு 50 பேர் முன்னாடி கத்துனாங்க- Rj பாலாஜி கொடுத்துள்ள Thug life பதில்

0
23869
rjbalaji
- Advertisement -

ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் ஆரம்பத்தில் படங்களில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். எல்கேஜி படத்தின் மூலம் தான் கதாநாயகனாக பாலாஜி தோன்றினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படமும் எதிர்பார்த்ததை விட அதிக அளவிற்கு வெற்றியைத் தந்தது. இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி அவர்கள் நானும் ரவுடிதான் படத்தின் போது தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான சில விஷயங்களை சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியது, நானும் ரவுடிதான் படத்தில் நானும் நடித்திருப்பேன். அப்போ நீயும் நானும் என்ற ஒரு காதல் பாடல் படமாக்கப்பட்டது. அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உடன் நானும் இருப்பேன்.

- Advertisement -

அந்த படத்தின் இயக்குனர் என்னுடைய நண்பர் தான். அந்த பாடலை பிருந்தா மாஸ்டர் தான் எடுத்தாங்க. அப்போ இயக்குனர் என்னிடம் கார் ஓட்டும் காட்சியில் நடிக்கணும் என்று சொன்னவுடனே நான் எனக்கு தான் கார் ஓட்ட தெரியாதே. உனக்கு தெரியாதா என்று கேட்டேன். உடனே அங்கிருந்த பிருந்தா மாஸ்டர் என்னது கார் ஓட்டத் தெரியாதா? என்று கத்தினார். நானும் ஆமா என்று சொன்னேன். அப்புறம் பத்து நிமிஷம் கழித்து என்னது கார் ஓட்டத் தெரியாதா? என்று பிருந்தா மாஸ்டர் கேட்டார்.

நான் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தேன். பின் நான் கார் ஓட்டும் காட்சியின் போது மட்டும் முன்னாடி இருந்து கயிறு கட்டி இழுந்தாங்க. அப்போது பிருந்தா மாஸ்டர் மைக்கில் கார் ஓட்டத் தெரியாதவன் எல்லாம் நடிக்க வந்துட்டான் என்று சொன்னாங்க. நான் இருந்த காரில் மைக் இருந்தது உடனே நான் அவஅவன் நடிக்க தெரியாமல் நடித்துட்டு இருக்கான். கார் ஓட்ட தெரியாமல் நடிக்க முடியாதா என்று சொல்லிட்டேன்.

-விளம்பரம்-
Advertisement