நீலிமா ராணி- இசைவானன் மற்றும் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் ஜோடிகள் விவகாரம் இணைத்து ஆர் ஜே ஷா வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நீலிமா ராணி. தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் நீலிமா. அதன் பின்னர் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே நீலிமா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான இரு பெண் குழந்தைகள் இருக்கிறது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது நீலிமா மீண்டும் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் விஷ்ணுகாந்த்- சம்யுக்தா ஜோடி திருமணம் ஆகி சில நாட்களிலேயே பிரிந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
ஆர் ஜே ஷா பதிவிட்ட வீடியோ:
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை சொல்லி பேட்டி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து தான் ஆர் ஜே ஷா தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், ஆறு வயதில் தேவர் மகன் படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நீலிமா. 19 வயதில் பிரியசகி படத்தில் நடிக்க இயக்குனர் இசைவாணன் என்பவரை அனுகி இருந்தார் நீலிமா. அந்த நேரத்தில் ஹீரோயினியாக அறிமுகமாக வேண்டிய தெலுங்கு சீரியலை அவர் கைவிட்டார்.
ஆனால், அந்த படம் சரியாக வெளியாகவும் இல்லை. அப்போதுதான் இசைவாணன் நீலிமா வாழ்க்கையில் வந்தார். நீலிமாவிற்கு தன்னால் தான் தெலுங்கு சீரியல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், பிரியசகி படத்திலும் ஒன்று நடக்கவில்லை என்ற குற்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அப்போதுதான் இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்து. நீலிமாவுக்கு 19 வயதிற்கும்போது இசைவாணனுக்கு 29 வயது. இவர்களுடைய நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிவடைந்தது. இதுவருக்குமே பத்து வயது வித்தியாசம். இருந்தாலும், சந்தோஷமாக தங்களுடைய குடும்ப வாழ்க்கையை நடத்தி இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள்.
மேலும், திருமணம் ஆன ஆறு மாதங்களிலேயே நீலிமாவின் அப்பா இறந்துவிட்டார். நீலிமாவிற்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு தம்பி இருந்தார். தன்னுடைய தம்பி படிப்பு படித்து முடித்து வேலைக்கு போகும் வரை குழந்தை வேண்டாம் என்று நீலிமா முடிவு எடுத்து தன்னுடைய கணவரிடம் சொல்லி புரிய வைத்தார். அதேபோல் தன்னுடைய தம்பி படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகுதான் நீலிமா குழந்தை பெற்றெடுத்தார். இதற்கிடையில் இந்த தம்பதிகள் படம் தயாரிக்க நினைத்தார்கள். கிட்டத்தட்ட இந்த படம் எடுக்க 4.50 கோடி ரூபாய் செலவானது. ஆனால், சில நண்பர்கள் முதுகில் குத்தியதால் இந்த படத்தை இவர்களால் வெளியிடவே முடியவில்லை.
பணம், வீடு எல்லாம் போய் வெறும் தாளிச் செயினுடன் நீலிமா நின்றார். அவர்களிடம் வாடகை வீட்டுக்கு செல்ல கூட பணமில்லை. அப்போது தான் இசைவாணன் நண்பர் வீட்டுக்கு சென்று அங்கு தங்கினார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து வாடகை வீட்டில் தங்கி அந்த வீட்டையும் வாங்கினார். இந்த கடனிலிருந்து இவர்களுக்கு வெளியேற நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு பின் தொடர்ந்து நீலிமா சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கை பயணத்தை நன்றாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் நீலிமாவும் அவருடைய கணவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதுதான்.
பத்து வயது வித்தியாசம், 15 வருட திருமண வாழ்க்கை, 16 பேர் கொண்ட பெரிய குடும்பம். இப்படி இருந்தும் இவர்கள் இடையில் இருக்கும் புரிதல் தான் இவர்களுடைய ஒற்றுமைக்கு காரணம். இன்னொரு பக்கம் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் ஜோடி திருமணமான 15 நாட்களிலேயே ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை சொல்லுகிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது ஒரு விஷயம் தான் தோன்றுகின்றது. டாப்ஸிக் ரிலேஷன்ஷிப் ஆக இருந்தால் டைவர்ஸ் வாங்கி விட்டுப் போகலாம்.
சோசியல் மீடியாவில் வந்து சொல்வதன் காரணமாக எந்த விஷயமும் நடக்கப்போவதில்லை. எப்படி நீலிமா வாழ்க்கையில் சோசியல் மீடியாவில் சொல்வதைக் கேட்டு நம்ம வாழனும் அவசியம் இல்லை என்று சொல்கிறார்களோ. அதே மாதிரி தான் நமக்கு ஒரு பிரச்சனை வரும் போது சோசியல் மீடியாவில் தீர்வு காண வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்க்கை என்பது இருபது வயது கல்யாணம் பண்ணி அப்போது இருக்கும் நெருக்கம் மட்டும் கிடையாது. முகத்தில் சுருக்கம் வரும் வரை 60, 70 வரை வயது வரையிலும் நெருக்கம் வேண்டும். அதுதான் உன்னதமான காதல் என்று கூறியிருக்கிறார்.