முதலில் அவரை வெளிய அனுப்புங்க.! விஜய் டிவியின் செல்லப்பிள்ளை ரோபோ பேட்டி.!

0
29413
Robo-Shankar
- Advertisement -

கடந்த இரண்டு வருடங்களாக விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளையான ரோபோ சங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் பேசியுள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

அதில் சாக்க்ஷி குறித்து பேசிய ரோபோ சங்கர், எல்லாம் இங்கிலிஷ்ல தான் பேசுறாளுக இல்லைனா இந்தியில் பேசுறாளுக, அப்புறம் எதுக்கு இங்க வந்த ஹிந்தி பிக் பாஸ் போக வேண்டியது தான. இதுல இவங்க பேசுனா கிழ எழுத்து போடறான். நான் அவ மூஞ்ச பாக்கறதா இல்ல அந்த எழுத்த பாக்கறதா. அதனால் அதை முதல்ல வெளிய அனுப்பிடலாம்.

10 ஆம்பளைங்கள ஒரு வீட்ல விட்டு பாருங்க எந்த பிரச்னையும் வராது ஆனால், ரெண்டு பொம்பளைங்கள விட்டா அவ்வளவு தான். எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு முறை மட்டும் செல்ல வேண்டும்னு ஆசை. அதே போல நான்லா உள்ள இருந்தா பீப் சௌண்டு போட்டுக்கிட்டே தான் இருக்கனும். அதனால் தான் நான் போல என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், மதுமிதா பற்றிய பேசிய ரோபோ சங்கர், மதுமிதாவிற்கு எப்போதும் கொஞ்சம் வாய் அதிகம் தான் என்று கூறியுள்ளார். மேலும், இந்த சீசனில் சாண்டி தான் கண்டிப்பாக ஜெயிப்பார் என்று கூறிய ரோபோ சங்கர், பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாரும் என்ஜாய் செய்து பார்க்கறதுக்கு முக்கிய காரணமே சாண்டி தான் என்று கூறியுள்ளார்.

Advertisement