கைது பண்ண வாரண்ட் எல்லாம் அனுப்பிட்டாங்க, இல்லனா இத்தனை லட்சம் கட்டுனு சொல்றான் – கிளி விவகாரம் குறித்து முதன் முறையாக பேசிய ரோபோ.

0
390
Roboshankar
- Advertisement -

சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் உள்ள கிளிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு தேசிய பூங்காவில் ஒப்படைத்திருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா பிரபல ஊடகம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்க்கு பதிலளித்த ரோபோ சங்கர் “இந்த கிளிகளை நாங்கள் பல காலமாக வளர்த்து வருகிறோம் ஒருநாள் இரண்டு நாள் கிடையாது மூன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். நாங்கள் இதனை வனத்துறையிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை.

-விளம்பரம்-

இந்த கிளிகளை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை இது என்னுடைய தோழி ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார் அவர் பரிசாக கொடுத்துதான் அது. எங்களுக்கும் கிளிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் தான் அவற்றிற்கு பிகில், ஏஞ்சல் என்று பெயர் வைத்து வளர்த்தோம், அவையும் எங்களை அக்கா, அம்மா என்றுதான் பேசும். குறிப்பாக என்னுடைய கணவரை ரோபோ சங்கர் என்று தான் கூறும்.

- Advertisement -

அனுமதி பெறாததற்க்கு காரணம் :

கடந்த மூன்றறை ஆண்டுகள் இந்த கிளிகளை எங்ககளின் குழந்தைகள் போன்று தான் வளர்த்து வந் தோம். பரிசாக கிடைத்த கிளி என்பதினால் நாங்கள் அனுமதி பெறவில்லை, அதே போலத்தான் நாங்கள் வனத்துறையிடமும் சொல்லவில்லை. தற்போது நாங்கள் இலங்கையில் உள்ளோம் வீட்டிற்கு. நாங்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து கிளிகளை எடுத்து சென்றிருக்கின்றனர். நாங்கள் ஊருக்கு வந்ததும் இதை பற்றி விளக்கமளிக்கவுள்ளோம் என்று கூறினார் பிரியங்கா.

புலம்பிய பிரியங்கா :

இப்படி ஒரு நிலையில் கிளிகளை அனுமதியின்றி வளர்த்ததற்காக இரண்டரை ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை அதிர்ச்சியூட்டியது. இதுகுறித்து பேசி இருக்கும் பிரியங்கா ‘நாங்கள் இருக்கும் சூழலுக்கு, இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் என்பது ரொம்ப பெரியத்தொகை. இந்தத் தொகையை கட்டுவது கஷ்டம்தான். ஆனாலும், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம். ‘ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

முதல் முறையாக பேசிய ரோபோ ஷங்கர் :

மேலும், இந்த அபராத தொகையை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக சென்ற பிரபா சங்கர் இந்த விவகாரம் குறித்து புலம்பி இருக்கிறார். அதில் ஆசைப்பட்டு இரண்டு கிளியே வளர்த்தேன் இன்று வரை என்னை பாடா படுத்தி பங்கம் பிழைக்கிறார்கள். அது எந்த வகையான கிளி என்பது கூட எனக்கு தெரியாது அது கிப்டாக வந்து கிளி. நான் லண்டன் சென்று வருவதற்குள் அதை தூக்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.

Robo

ஒரு கிளிய வளத்தது தப்பாடா :

அத்தோடு விட வேண்டும் அல்லவா என்னை விசாரணைக்கு அழைத்தவுடன் எனக்கு தலையே சுற்றிவிட்டது. இப்போது கைது செய்ய வாரண்ட் எல்லாம் அனுப்பி விட்டார்கள். ஏண்டா, ஒரு கிளிய வளத்து தப்பாடா. இல்லையென்றால் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்துங்கள் என்கிறான். அதனால் எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க, இப்போதுதான் ஒன்னு ரெண்டு கல்லூரி நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள். அங்கே என்ன கொடுக்கிறார்களோ அதை எடுத்து வந்து கொடுத்து வழக்கை முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார் ரோபோ ஷங்கர்.

Advertisement