இவங்கள உள்ள விட்டா பாக்கு போட்டு எச்ச துப்பினு இருப்பாங்கன்னு சொன்னாங்க – ரோகினி திரையரங்கில் அவமதிப்பட்ட நரிக்குறவர்களின் ஏக்க குரல்.

0
391
- Advertisement -

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என்று வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து ரோகிணி திரையரங்கம் வீடியோ ஒன்றை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளது.  ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘பத்து தல’. இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  மஃப்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான இந்த திரைப்படத்தை காண முதல் நாளே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் கூடி கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காண ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நரிக்குறவர் பெண் ஒருவர் டிக்கெட் இருந்தும் திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்ததோடு அவரை ஊழியர் அசிங்கமாக திட்டியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

- Advertisement -

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாத பல்வேறு பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட ரோகிணி திரையரங்கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதில் ”படம் பார்க்க வந்தவர்கள் அவர்களுடன் சில குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பதால் சட்டத்தின் படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதி கிடையாது எங்களுடைய திரையரங்க ஊழியர்கள் இரண்டு வயது, ஆறு வயது எட்டு வயது மற்றும் பத்து வயது சிறுவர்களுக்கு மட்டும் தான் அனுமதியை மறுத்திருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் அதற்குள்ளாக அங்கே சூழ்ந்த சில ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் வேறு விதமாக சித்தரித்து விட்டார்கள். ஆனால், இதே குடும்பத்தினர் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவும் இணைக்கப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டு அந்த நரிக்குறவர் குடும்பத்தினர் திரையரங்கற்குள் அமர்ந்து படத்தை பார்க்கும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறது.

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் இப்போது மட்டும் எப்படி சிறுவர்களை யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை பார்க்க அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்கள். அதில் எங்களிடம் டிக்கெட் இருந்தும் எங்களை உள்ளே விடவில்லை. அப்போது அருகில் இருந்த சிலர் ஏன் இவர்களை உள்ளே விட மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர்கள் இவர்களை உள்ளே விட்டால் பாக்கு போட்டு கொண்டு எச்சில் துப்புவார்கள் அதனால் தான் உள்ளே விடவில்லை என்று கூறினார்கள். பின்னர் அங்கிருந்து அவர்கள் சண்டை போட்டு எங்களை உள்ளே அனுமதிக்க வைத்தார்கள். இது போன்ற நடப்பது முதல் முறை அல்ல ஏற்கனவே விஜயின் வாரிசு படத்திற்கும் இப்படித்தான் எங்களை டிக்கெட் இருந்தும் உள்ளே விடவில்லை. இப்படி எல்லாம் இவர்கள் பண்ணுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று உறுகுடன் பேசி இருக்கிறார்கள்.

Advertisement