ரோஜா படத்துக்கு பிறகு மணிரத்னம் எனக்கு வாய்ப்பு கொடுக்காத காரணம் நான் பண்ண அந்த விஷயம் தான் காரணம்.

0
352
- Advertisement -

ரோஜா படத்திற்கு பிறகு நடிகை மதுவிற்கு மணிரத்தினம் வாய்ப்பு கொடுக்காத காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொறுத்த வரை ஹீரோவை விட ஹீரோயின்கள் விரைவில் வயது முற்றி போய் விடுகின்றனர். ஆனால், ஒரு சில நடிகைகள் 50 வயதை கடந்தும் அதே போல் இருக்கின்றனர். நதியா, ஸ்ரீதேவி என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மதுபாலா. இவர் தமிழில் அழகன் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகிறார். அது மட்டும் இல்லாமல் இவருடைய பெயரை மதுபாலா என்று மாற்றி வைத்தது இயக்குனர் கே பாலசந்தர் தான். அழகன் படத்திற்கு பிறகு இவர் நிறைய படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட படம் ரோஜா தான்.

- Advertisement -

மதுபாலா திரைப்பயணம்:

1992 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனரான மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து இருந்தார் மதுபாலா. ரோஜா படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பிரபுதேவா, பிரபு, பிரசாந்த் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் இவர் தமிழ்,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்தார்.

மது திருமணம்:

குறிப்பாக, மற்ற மொழி படங்களைவிட ஹிந்தியில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே மது
1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தது. சிறிது காலம் இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின் சமீப காலமாக மது படங்களில் நடித்து வருகிறார். அதோடு 50 வயது கடந்தாலும் மது படு இளமையாக கவர்ச்சியாக புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

மணிரத்தினம்-மது குறித்த சர்ச்சை:

அதோடு இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் நடிகை மதுவிற்கு மணிரத்தினம் வாய்ப்பு கொடுக்காத சர்ச்சை தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு இருக்கிறது. ரோஜா படத்திற்கு பிறகு மது அவர்கள் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மணிரத்தினம் அவர்கள் மதுவிற்கு வேறு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இது குறித்த காரணமும் என்னவென்று தெரியவில்லை.

மதுபாலா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் மது அளித்த பேட்டியில் இது தொடர்பாக கேட்டபோது அவர், மணிரத்தினம் எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்னுடைய தவறுதான். அதற்கு என்னுடைய ஆட்டிடியூட் தான் காரணம். இயக்குனர் மணிரத்தினம் ஒவ்வொரு நடிகர்களுடனும் தொடர்பில் இருப்பார். ஆனால், அவருடன் டச்சில் இல்லை. அதனால் தான் இருவர் படத்திற்கு பிறகு வேறு எந்த வாய்ப்பும் அவர் எனக்கு தரவில்லை. அதோட எனக்கு குடிப்பழக்கம் இருந்ததாலும் பெரிதாக படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement