கணவருக்காக ரோஜா சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா, இரண்டே மாதத்தில் புதிய சீரியல், ஹீரோ யார் தெரியுமா ?

0
3588
- Advertisement -

இரண்டே மாதத்தில் நடிகை பிரியங்கா மீண்டும் சீரியலில் நடிக்க களமிறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போட்ட ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. இவர் முதலில் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
roja

பின் இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரியங்கா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்து இருந்தார். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே நடிகை பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை காதலித்து வந்தார்.

- Advertisement -

பின் பிரியங்காவிற்கும் ராகுலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு நிச்சயதார்தம் முடிந்தது. ஆனால், சில காரணங்களால் இவர்கள் திருமணம் நின்று விட்டது. பின் சில மாதங்களுக்கு முன் தான் ப்ரியங்காவிற்கும் ராகுலுக்கும் விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

Priyanka

சீரியலில் விலகிய பிரியங்கா:

மேலும், திருமணத்திற்கு பின் பிரியங்கா சீரியலில் நடித்து கொண்டு தான் வந்தார். ஆனால், அவர் கணவருக்கு பிரியங்கா நடிப்பதில் விருப்பம் இல்லை என்று சொன்னதால் சீதாராமன் சீரியலில் இருந்து நாயகி பிரியங்கா வெளியேறி விட்டார். அவருக்கு பதில் தற்போது வேறு ஒரு நடிகை சீதா ரோலில் நடித்து வருகிறார். இவர் சீரியலில் இருந்து விலகிய பிறகும் நல்ல ரேட்டிங்கிலேயே சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் பிரியங்கா நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

நள தமயந்தி சீரியல்:

அதாவது, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் தான் கதாநாயகியாக பிரியங்கா கமிட் ஆகி இருக்கிறார். அந்த சீரியலுக்கு நள தமயந்தி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணே கலைமானே தொடரில் நடித்த நந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் அக்டோபர் இரண்டாம் தேதி ஒளிபரப்ப இருப்பதாக சேனல் தரப்பில் கூறப்படுகிறதுதற்போது அந்த சீரியலுக்கான புரொமோ ஷூட் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரியங்கா கலந்து கொண்டு இருக்கிறார்.

பிரியங்கா தரப்பில் கூறியது:

இது குறித்து பிரியங்கா தரப்பில் விசாரித்த போது, திருமணம் முடிந்ததுமே கணவருடன் அவர் மலேசியாவுக்கு கிளம்பி போய்விட்டார். ஆனால், நடித்துக் கொண்டிருந்த அவரால் அங்கு சும்மா இருக்க முடியுமா? அதனால் கணவரிடம் திரும்ப நடிக்க அனுமதி கேட்டு பேசி இருக்கிறார். டிவியிலும் நல்ல வாய்ப்பு வரும்போது தவறவிட முடியுமா? கொஞ்சம் சம்பாதித்து விடலாம் என்று பேசி இருக்கிறார். இவருடைய ஆர்வத்தை பார்த்து தான் அவருடைய கணவரும் வேறு வழி இல்லாமல் மனசு மாறி சம்மதித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Advertisement