‘வேலைக்கு தான வந்திருக்கீங்க, சரக்கடிச்சிட்டு வரது தப்பா இல்லையா’ பிஜிலி ரமேஷை வறுத்தெடுத்த விக்கி – வைரலாகும் வீடியோ.

0
484
vignesh
- Advertisement -

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஜிலி ரமேஷ்ஷை குடித்துவிட்டு வந்து இருக்கிறீர்களா என்று விக்னேஷ் சிவன் கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடிந்துள்ளனர். அந்த வகையில் Gp முத்து, ரௌடி பேபி சூர்யா போன்றவர்களை கூறலாம். அந்த வரிசையில் “fun பண்றோம்” என்ற பிராங்க் ஷோ மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ்.

-விளம்பரம்-

தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாகப் படுத்தி எடுக்க மிகப் பிரபலமானவர். இதுதான் தவறான விஷயம்’,தமிழ்நாட்டுக்கு இருக்கு ஆப்பேய்’, `ஓபிஎஸ்ஸு ஈப்பியெஸ்ஸைப் போய் கேளுய்யா’ என எளிய குரலில் அவர் பேசிய வார்த்தைகள் சமூக வலைத்தளத்தில் ஓவர் நைட்டில் மிகவும் பிரபலமானார்.

இதையும் பாருங்க : ‘உங்களுக்கு என்னை பிடிக்காது நினைக்கிறேன்’ – திருமணத்திற்கு அழைத்த செல்வமணியிடம் ஜெயலலிதா சொன்ன விஷயம்.

- Advertisement -

ஒரே வீடியோவால் ஏற்பட்ட பிரபலம் :

ரஜினியின் தீவிர ரசிகரான இவரை பல்வேறு தனியார் ஊடகங்களும் வளைதள சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை பேட்டி எடுத்தனர். அதே போல இவருக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்தது நெல்சன் தான். நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் கபீஸ்க்குபா என்ற பாடலில் இடம்பெற்று அசத்தி இருந்தார் பிஜிலி.இதை தொடர்ந்து இவருக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்தது.

குவிந்த பட வாய்ப்புகள் :

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து ஜாம்பி, சிவப்பு மஞ்சள் பச்சை, பொன்மகள் வந்தால், நட்பே துணை போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார். ஆனால், பிராங்க் வீடியோ கைகொடுத்த காமெடியின் அளவிற்கு சினிமாவில் இவருக்கு காமெடி கைகொடுக்கவில்லை. அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்று இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் பிஜிலி.

-விளம்பரம்-

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஜிலியை கலாய்த்த விக்கி :

இப்படி ஒரு நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் பிஜிலி ரமேஷை, குடித்துவிட்டு வந்துள்ளீர்களா என்று விக்னேஷ் சிவன் கேட்டு கலாய்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ‘சரக்கடிச்சீங்களா, வேலைக்கு தான வந்து இருக்கீங்க, தப்பா இல்லையா ? Abcd சொல்லுங்க’ என்று விக்னேஷ் சிவன் கேட்க அதற்கு பிஜிலியும் Abcd சொல்லி இருக்கிறார்.

விக்னேஷ் சிவனின் அடுத்த படங்கள் :

தற்போது விக்னேஷ் சிவன் நீண்ட வருடங்களுக்கு பின்னர் ‘ காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி இருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் 62 படத்தை இயக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

Advertisement