ஜெய் பீம், சார்பட்டா படங்களின் வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது. தவறவிட்ட படங்கள் குறித்து பாரதி கண்ணம்மா ரோஷினி.

0
899
Roshini
- Advertisement -

பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி இழந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த தொடர் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்தது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
roshini

இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு முக்கிய காரணம் ரோஷினி தான். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. அதோடு இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தவுடன் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா ரோஷினி:

மேலும், சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று சொன்னவுடன் குஷி ஆகி விட்டார்கள். ஆனால், இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் மீண்டும் நிகழ்ச்சியில் ரோஷினை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்து விட்டார்கள்.

பட வாய்ப்பை இழந்த ரோஷினி:

அதன்பின் ரோஷினி எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவருடைய சினிமா வாய்ப்பு குறித்தும் எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில் பிரபலமான ஹீரோக்களின் படங்களின் வாய்ப்பை ரோசினி இழந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் சார்பாட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

-விளம்பரம்-

சார்பாட்டா பரம்பரை படம்:

மேலும், இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த வாய்ப்பை இழந்து விட்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த படம் ஜெய்பீம். இந்த படம் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளையும், உண்மையில் நடந்த சம்பவத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த படம் பலதரப்பட்ட மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெய்பீம் பட வாய்ப்பு:

மேலும், இப்படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் முதலில் ரோஷனிக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரோஷனி சீரியலில் நடித்து வந்ததால் அந்த வாய்ப்பையும் ஏற்க முடியாமல் போனது. இப்படி தொடர்ந்து பல படங்களில் பாரதிகண்ணம்மா சீரியலால் நடிக்க முடியாமல் போனது. இதனால் ரோஷினி சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த இரு படங்களிலுமே ரோஷினி நடித்திருந்தால் அவருடைய சினிமா கேரியர் வேற லெவலில் சென்று இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement