விபத்துக்கான காரணம் குறித்து ttf வாசன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. யூடுயூபில் பைக் சாகசங்கள் செய்து 2k கிட்ஸ் மனதில் ஹீரோவாக திகழ்ந்து வரும் TTF வாசன் தற்போது பைக் விபத்தில் சிக்கி இருக்கிறார். என்னதான் இவருக்கு 2k கிட்ஸ் ஆதரவு இருந்தாலும் இவர் இளைஞர்களுக்கு ஒரு தவறான உதாரணம் என்று தான் பலர் கூறி வருகின்றனர். இவர் மீது பல முறை சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் இவர் அடிக்கடி பொது சாலையில் விதி மீறல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்.
Nice ! pic.twitter.com/pBITSuEtFL
— Prashanth Rangaswamy (@itisprashanth) September 17, 2023
அந்த வகையில் சமீபத்தில் இவர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து கோர விபத்தில் சிக்கி இருந்தார். இந்த விபத்தில் அவருக்கு அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ttf வாசன் ரசிகர்கள் சிலர் TTF வாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதே சமயம் பெரும்பாலான மக்கள் பலர் இது போன்று போது சாலையில் ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் இவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேணும் என்றும் இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்றும் காவல் துறை பரிந்துரை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று விடியற்காலையில் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார்.
இப்படி ஒரு நிலையில் காவல் நிலையத்திற்குள் இருந்த TTFஐ வெளியில் வந்தவுடன் கேள்வி கேட்க பத்திரிகையாளர்கள் சிலர் வெகு நேரம் காத்திருந்தனர். அப்போது போலீசார் ttf வாசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரில் அழைத்து வந்தனர். இதனால் கடுப்பான பத்திரிகையாளர் ஒருவர் ‘அக்யூஸ்டுக்கு எதுக்கு இவ்வளோ பாதுகாப்பு? காலை 8 மணி முதல் நாங்கள் வெளியே நிற்கிறோம் நீங்கள் அவரை இப்படி காரில் அழைத்துச் சென்றார் என்ன அர்த்தம் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ttf வாசன் ‘அண்ணா தெரியாமல் நடந்த ஒரு சின்ன விபத்து தான் என்று கூறினார்.அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் ஸ்டண்ட் செய்யும் போது விழுந்து விட்டதாக சொல்கிறார்களே என்று கேள்வி எழுப்பியதற்கு ஸ்டண்ட் பண்ணும்போது விழவில்லை விழும் போது தானாகவே வண்டி தூக்கி விட்டது ‘ என்று மிகவும் கூலாக பதில் சொல்லிவிட்டு சென்றார்.