அவர் அந்த ஷோ ஆங்கரா இருந்த போது நான் ட்ரம்மர் – SK சைகை காண்பித்து பாராட்ட சொன்ன இவர் யார் தெரியுமா ?

0
277
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது.

-விளம்பரம்-

RRR விழாவில் Sk :

இதனை தொடர்ந்து இவர் தற்போது அயலான், டான் போன்று பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அந்த விழாவில் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து நடனமாடி இருக்கிறார்கள். அதற்கு தொகுப்பாளர்கள் வாழ்த்துக்கூறி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

பாராட்ட சொன்ன Sk :

உடனே சிவகார்த்திகேயன் ட்ரம்ஸ் வாசித்தவரையும் பற்றி பேசுங்கள் என்று சைகை செய்து இருந்தார். இதை பார்த்த தொகுப்பாளர் ஆர் ஜே விஜய், சிவகார்த்திகேயன் செய்ததை புரிந்து கொண்டு அந்த ட்ரம்ஸ் கலைஞர் அருகில் சென்று அவரையும் பாராட்டினார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மேலும், சிவகார்த்திகேயனின் இந்த செயலுக்கு பாராட்டும் குவிந்தது.

யார் இந்த Drummer :

இப்படி ஒரு நிலையில் RRR பட விழாவில் ட்ரம்ஸ் வசித்த அந்த நபர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அவருடைய பெயர் வெற்றி இவர் பல நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் ட்ரம்ஸ் கலைஞ்சராக பணியாற்றி இருக்கிறார். மேலும், இவருக்கு சிவ கார்த்திகேயனை ஏற்கனவே தெரியுமாம். இப்படி ஒரு நிலையில் அந்த பேட்டியில் மேடையில் நடந்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து பேசி இருக்கும் அவர்;-

-விளம்பரம்-

சிவா அண்ணனுக்கு அது தெரியும் :

ஒரு நிகழ்ச்சியை Host செய்து கொண்டு செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நிறைய அழுத்தம் இருக்கும். ஒரு தொகுப்பாளர் Talk BACKல் என்ன சொல்கிறார்கள் என்பதை செய்ய வேண்டும், ரசிகர்களை கவர் பண்ண வேண்டும். இதைத் தாண்டி அவர்கள் சில விஷயங்களை மறந்து விடுவார்கள் அது சாதாரணமான ஒரு விஷயம் தான். ஆனால், சிவா அண்ணனுக்கு அது தெரியும். ஏனென்றால் அங்கிருந்து அவர் போனவர்தான். அதுவும் அதை எப்படி சொல்வது என்பது அவருக்கு தெரியும்.

சூப்பர் சிங்கரில் ட்ரம்மர் :

அதை அவர் மிகவும் கடுமையாக கூட சொல்லவில்லை சாப்டாகவும் சொல்லவில்லை வெறும் ஒரு கை ஓசை வேலையை முடித்து விட்டார். அதை விஜய் பிடித்துகேகொண்டார் என்று கூறியிருக்கிறார். அதேபோல இவருக்கு சிவகார்த்திகேயனை ஏற்கனவே தெரியுமாம் சிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தபோது இவர் அதே நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசித்தவர் தானாம். அதேபோல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வந்த முதல் பாடலில் இவர் டிரம்ஸ் கலைஞர் ஆக பணியாற்றி இருக்கிறாராம்.

Advertisement