அசீம் வென்றது எப்படி ? அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை? – RTI மூலம் பல கேள்விகளை எழுப்பிய பிரபலம்.

0
593
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அசீம், பிக் பாஸ் பட்டத்தை வென்றது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்து இருக்கிறார். ஜோ மைக்கேல் மிகவும் பிரபலமானது மீரா மிதுன் விஷயத்தில் தான். சூப்பர் மாடல் என்று மோசடி செய்து வந்த மீரா மிதுனின் உண்மை முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டியது இவர் தான். அதே போல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகரும் ஆவார். அந்த வகையில் இந்த சீசன் நடைபெற்ற போது பல போட்டியாளர்கள் குறித்து விமர்சனம் செய்தார்.

அதிழும் குறிப்பாக தனலட்சுமி வெளியில் செய்த மோசடிகளை ஆதாரத்துடன் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளிக்காட்டி வந்தார். அதே போல இந்த சீசனில் அசீம் வென்றது மிகவும் நியாயமற்றது என்று தொடர்ந்து கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த தகவலை தன ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் எழுப்பிய கேள்விகள் என்னவெனில் ‘அவர் தனது மனுவில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிசிசிசி (பிராட்காஸ்ட் கண்டண்ட் கம்ப்ளைண்ட் கவுன்சில்) சான்றிதழ் வழங்கியுள்ளதா? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா? பிக்பாஸ் சீசன் 1 முதல் 6 வரையிலும் நிகழ்ச்சிக்கு எதிராக ஏதாவது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதா? பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகள் முறையாக பதிவு செய்யப்பட்டதா?

ஒவ்வொரு வார இறுதியிலும் எதன் அடிப்படையில் எலிமினேஷன் நடந்தது?. சீசன் 6 வெற்றியாளர் எதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டார்?. அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை?. எதன் அடிப்படையில் விக்ரமன் ரன்னராக அறிவிக்கப்பட்தார் ? அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே எத்தனை வாக்குகள் வித்தியாசம்?. என அடுக்கடுக்காக பல கேள்விகளைஎழுப்பி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

Advertisement