விக்ரம் கமல் ஸ்டைலில் மோகன் ஜிக்கு பகாசூரன் தயாரிப்பாளர் கொடுத்த பரிசு – ப்பா இத்தனை லட்சமா ?

0
599
mohan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

பகாசூரன் :

இப்படி ஒரு நிலையில் இவர் பகாசூரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்து இருக்கிறார். மேலும், நட்டி, ராதாரவி, vj லயா என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கிறார். சமூகத்தில் பெண்கள் பாலியில் தொழில் எப்படி சிக்குகிறார்கள், செல் போன்கல் மற்றும் சமுக வலைத்தளத்தினால் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது போன்றவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம் :

இந்நிலையில் இப்படம் அதிகமான எதிர்மறை கருத்துகளை கூறும் படமாக இருக்கிறது எனவும். பெண்கள் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்றும், பெண்களையே அணைத்து சுமைகளையும் சுமக்க வேண்டும் என்று இயக்குனர் மோகன் ஜி இப்படத்தை இயக்கியிருக்கிறார். வெளிநாடு போல சென்னை மக்கள் மாறிவிட்டனர், பிள்ளைகள் ரூமுக்குள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியது தானே போன்ற வசனங்கள் மிகவும் பிற்போக்கு தனமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

-விளம்பரம்-

நல்ல வசூல் :

இப்படி இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு படம் என்று ஒரு புறமும், இந்த படம் பிற்போக்கான படமாக இருக்கிறது என்று மற்றொரு புறமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், இதையல்லாம் தாண்டி இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, நல்ல வசூலும் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிட்டிங் GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் ஜியை பாராட்டும் வகையில் பரிசு ஒன்றை வழங்கினார்.

தயாரிப்பாளர் கொடுத்த பரிசு :

பகாசுரன் படக்குழு கலந்து கொண்ட இந்த விழாவில் தயாரிப்பாளர் கௌதம் விக்ரம் பட வெற்றிக்கு சூர்யாவிற்கு கமல் rolex வாட்சை பரிசாக கொடுத்தது போல பகாசூரன் பட தயாரிப்பாளர். இயக்குனர் மோகன் ஜிக்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் ஒரு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். அதோடு இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களும் கலந்து கொன்டு “பகாசூரன்” படக்குழுவிற்கு தன்னுடைய பார்த்துக்களை தெரிவித்தார். மேலும் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement