விஜய் அல்லது அஜித், அரசியல் யாருக்கு செட் ஆகும்.! எஸ் ஜே சூர்யாவின் அசத்தலான பதில்.!

0
677
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருமே தற்போது அரசியல் களத்தை கண்டுவிட்டனர். இவர்கள் இருவருக்கும் பின்னர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரங்களாக இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இதில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

-விளம்பரம்-

இதில் விஜய் தனது படங்களில் அரசியல் கலந்த வசனங்களை பேசி அரசியலுக்கு வருவாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அதே போல அஜித் போன்ற நல்ல மனிதர் அரசியலுக்கு வர வேண்டும் என்று பல்வேறு பிரபலங்களும் ஏற்கனவே கூறிவிட்டனர்.

- Advertisement -

இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித்தை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர் எஸ் ஜே சூர்யா அரசியல் யாருக்கு சிறப்பாக செட் ஆகும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். எஸ் ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் திரைபடம் நல்ல வெற்றியை கண்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டார் எஸ் ஜே சூர்யா.

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், எஸ் ஜே சூர்யாவிடம் அஜித் மற்றும் விஜய் யாருக்கு அரசியல் செட் ஆகும் என்று நினைக்கிறீர்கள்என்று என்று கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த எஸ் ஜே சூர்யா, அப்படியெல்லாம் நாம் சொல்லிவிட முடியாது. அவர்கள் என்ன விருப்பபடுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-

ஆனால், ஒன்று மட்டும் உறுதி, விருப்பட்டு அதற்கான முயற்சிகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதில் வெற்றி பெறக்கூடிய ஆட்கள் அவர்கள். அந்த முயற்சியை யார் எடுத்து வைப்பார்கள் என்று பார்க்க வேண்டும். இருண்டு பெரும் நினைத்ததை முடிக்க கூடிய ஆட்கள் தான். மக்கள் தங்களுக்கு கொடுத்ததை எப்படி அவர்கள் மீண்டும் எந்த வகையில் மக்களுக்கு அவர்கள் திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள் என்பது அவர்கள் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. ஆனால், இரண்டு பேருமே முடிவெடுத்து விட்டால் அந்த விடயத்தில் வெற்றி பெற கூடிய ஆட்கள் தான்’ என்று கூறியுள்ளார்.

Advertisement