ஆர்வக்கோளாறில் வாய்விட்ட சிவகுமார்.! குடும்பத்தையே கலாய்த்த எஸ் வி சேகர்.!

0
14528
s-v-sekar
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

-விளம்பரம்-
h-raja-criticized-actor-surya

இதையடுத்து, இந்தி இல்லை மூன்றாவது இல்லை என்றும் , அவரவர் விருப்பப்படி மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என்று மத்திய அரசு திருத்தும் செய்து வரைவு அறிக்கை ஒன்றை அறிவித்தது. இந்த எதிர்ப்புக்கு பின்னர் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்து தெரிவிக்க வேண்டிய காலகட்டத்தை ஒரு மாதம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

- Advertisement -

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

-விளம்பரம்-

மும்மொழி கொள்கையை விமர்சித்ததை அடுத்து சூர்யாவையும், அவரது குடும்பத்தினரையும் பா ஜ கவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகுமார், என் பிள்ளைகளாக இருந்தால் டீ , காபி குடிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருந்தார்.

சிவகுமாரின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், பா ஜ க அணியின் தீவிர தொண்டரும் நடிகருமான எஸ் வி சேகர், சிவகுமாரின் கருத்தை கலாய்க்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில், காபி.. டீ குடிக்காதீங்க. ஆனால் என் குழந்தைகள் காபி விளம்பரத்தில்  நடிக்கலாம்’ என்று கூறி விமர்சித்து ட்வீட் செய்து கிண்டலடித்துள்ளார் 

Advertisement