12 ஆண்டுகள் கழித்து வெளியான ராமராஜனின் ‘சாமானியன்’ எப்படி? இதோ விமர்சனம்

0
410
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சாமானியன். இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், கே எஸ் ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் படத்தில் இயக்குனர் காண்பித்திருக்கிறார். படத்தில் பரபரப்பாக ஒரு வங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்போது சாமானிய மனிதன் ஒருவன் அந்த வங்கிக்குள் நுழைந்து டைம் பாம், துப்பாக்கி போன்ற பொருட்களை எல்லாம் காட்டி மேனேஜரை மிரட்டுகிறார்.

- Advertisement -

வங்கியில் உள்ள எல்லோருமே பயந்து விடுகிறாரல்கள். பின் அந்த வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் அந்த சாமானியன் கொண்டு வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்து வங்கியை போலீஸ் சூழ்ந்து விடுகிறது. பின் மீடியாவிற்கும் இந்த விவகாரம் தெரிய வருகிறது. வங்கியையும் அங்கு இருக்கும் மக்களையும் மீட்க அந்த சாமானியன் வைக்கும் கோரிக்கை வைக்கிறார்.

அவர் வைக்கும் கோரிக்கைக்கு போலீஸ் ஒத்துழைத்ததா? அந்த சாமானியன் யார்? அவன் ஏன் வங்கியை கொள்ளையடிக்க வந்தான்? அவன் வைத்த கோரிக்கை தான் என்ன? என்பதே தான் படத்தின் மீதி கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜனை திரையில் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விட்டார்கள். இவர் கம்பீரம், சென்டிமென்ட் போன்ற காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சமூக விரோதிகளுக்கு பாடம் புகட்டும் கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவருக்கு உறுதுணையாக ராதாரவியும், எம் எஸ் பாஸ்கரும் இருக்கிறார்கள். இவர்களுடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. மைம் கோபியின் வில்லத்தனம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். மேனேஜராக வரும் போஸ் வெங்கட் நன்றாக நடித்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் கே எஸ் ரவிக்குமார், லியோ சிவகுமார், வினோதினி, முல்லை தனசேகர் உட்பட பலரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மேலும், படத்தில் இசைஞானி இளையராஜா பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இவருடைய சிலர் பாடல் வரிகள் பழைய காலத்துக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று லோன் கேட்டு வங்கிக்கு வருபவர்களை எப்படி எல்லாம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன அநீதி நடக்கிறது என்பதை இயக்குனர் இந்த படத்தில் காண்பித்திருக்கிறார். சமூகத்திற்கு தேவையான அறிவுரையையும் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கும் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

ராமராஜன் நடிப்பு நன்றாக இருக்கிறது

கதைக்களம் ஓகே

சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை

பின்னணி இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

குறை:

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

பாடல்கள் எல்லாம் பெரிய அளவு கவரவில்லை

மொத்தத்தில் சாமானியன்- சளைத்தவன் கிடையாது

Advertisement