-விளம்பரம்-
Home விமர்சனம்

ஹிப்ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘வீரன்’ எப்படி இருக்கு – முழு விமர்சனம் இதோ

0
3621
Veeran

பொதுவாகவே ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் வெளியாகும் படங்கள் என்றாலே சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக மார்வெல்லின் அவென்ஜர்ஸ், ஸ்பைடர்மேன், டிசியின் பேட்மேன், சூப்பர் மேன். ஜஸ்டிஸ் லீக் போன்ற படங்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோ கான்செப்டில் தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தாம் வீரன்.

-விளம்பரம்-

இப்படத்தில் ஹீரோவாக ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கிறார். மேலும் இந்த படம் மரகத நாணயம் போல பெரிய ஹிட் கொடுத்த படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் வீரன் படத்தை இயக்கியதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் ஹிப் ஹாப் ஆதியை சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று வெளியாகி இருக்கும் வீரன் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

கதைக்களம் :

படத்தின் தொடக்கத்தில் கதாநாயகன் குமரன் கதாபாத்திரத்தில் வரும் அதி வீரனூரில் சிறுவயதில் மின்னலால் தாக்கப்படுகிறார். இதனால் சுயநினைவை இழந்த ஆதியை மருத்துவமனையில் சேர்க்க அங்கிருந்த மருத்துவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதிக்கு சுயநினைவு வரலாம் என்று கூறுகின்றனர். இதனையடுத்து அவருடய ஆதியுடைய அக்கா அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்கிறார். பின்னர் சுயநினைவு வருகிறது.அப்படிப்பட்ட நிலையில் தான் தன்னிடம் மின்னலின் சக்தி இருப்பதை ஆதிக்கு தெரிய வருகிறது.

-விளம்பரம்-

அந்த சக்தியை சோதித்து பார்க்கும் ஆதி 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனுருக்கு வருகிறார். அந்த நேரத்தில் வில்லன் 2000ரூபாய் மதிப்பில் ஒரு ஆபத்தான திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த விரும்புகிறார். அந்த திட்டத்தினால் அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆதிக்கு தெரியவருகிறது. இந்நிலையில் அதற்கு பிறகு என்ன நடந்தது? வில்லனை எப்படி அதி எதிர்கொண்டார்? அங்குள்ள மக்களை காபாடினாரா? என்பதுதான் கதை.

-விளம்பரம்-

ஊரின் காவலாக இருக்கும் சாமியே ஹீரோவாக வந்தால் எப்படி இருக்கும் கான்சப்டை கொண்டு சிறப்பாக இயக்கியுள்ளார் ஏ.ஆர்.கே.சரவணன். இப்படத்தில் ஹீரோவாக வரும் ஆதி வீரனாகவும், குமாரனாகவும், ஆக்சன் காட்சிகளிலும் பிரித்து விட்டார். அவருடைய நண்பன் கதாபாத்திரத்தின் நடிப்பும் பிரமாதம். காமெடிக்காக வரும் முனீஸ்காந்த் மற்றும் காளியின் காமெடியால் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது. இதனால் படத்தில் தொய்வு என்பதற்கு இடம் இல்லாமல் சென்றுவிட்டது.

ஆனால் வில்லனாக குறைவாக காட்சிகளில் மட்டுமே வரும் வினய்க்கு இன்னமும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இருந்த போதிலும் இரண்டாவது வில்லனாக வரும் பத்ரி பின்னிவிட்டார். அதே போல படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடைய வேலையே சரியாக செய்துள்ளனர். குறிப்பாக வீரனை மட்டுமே நம்பும் பெரியவரின் நடிப்பு பிரமாதம். எடிட்டிங், கலை, ஒளிப்பதிவு அணிதிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது படக்குழு.

நிறை :

திரைக்கதை, இயக்கம் பிரமாதம்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் சூப்பர்.

முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் நகைச்சுவை படத்திற்கு பலம்.

வில்லனாக வரும் பத்ரி.

குறை :

பாடல்கள் மனதில் நிக்கவில்லை.

வில்லனாக வரும் வினய்க்கு இன்னமும் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் சூப்பர் ஹீரோ கான்செப்டில் உருவான இந்த வீரன் படம் ஹிப் ஹாப் ஆதியின் மற்றொரு வெற்றிப்படம்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news